முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம்

🕔 May 9, 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் –

நோன்பு கால விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம் செய்துள்ளதாக கல்வியமைச்சு சுற்று நிரூபமொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே இம் மாதம் 12ம் திகதி நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் நோன்புகால விடுமுறைக்காக மூடப்படும் எனவும் 11ம் திகதி பாடசாலை இறுதி தினம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திகதியில் மாற்றம் செய்யப்பட்டு நோன்பு விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் இம் மாதம் 15ம் திகதி மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இப் பாடசாலைகள் நடைபெறும் இறுதி தினமாக 14ம் திகதியெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர் வரும் 15ம் திகதி மூடப்படும் முஸ்லிம் பாடசாலைகள், ஜுன் மாதம் 18ம் திகதி திறக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்