பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம்: கல்வியமைச்சின் செயலாளர்

🕔 September 17, 2021

யணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக உலகளாவிய ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி – ஜனாதிபதி தலைமையிலான கொவிட் பரவலை தடுப்பதற்கான செயலணி தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை 02 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்