பாடசாலைகளை 04 கட்டங்களாகத் திறக்க, கல்வியமைச்சு தீர்மானம்

🕔 June 9, 2020

திர்வரும் ஜூலை 06ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளள.

அதற்கிணங்க முதற்கட்டமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக  ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டாம் கட்டமாக, தரம் 05 – 11 – 13 ஆகிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் ஜூலை 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

மூன்றாம் கட்டமாக ஜூலை 20ஆம் திகதி தரம்10 மற்றும் தரம் 12 மாணவர்களுக்காக பாடசாலை திறக்கப்பட உள்ளன.

நான்காம் கட்டமாக  3, 4, 6, 7, 8,மற்றும் 9 தர மாணவர்களுக்காக பாடசாலை ஜூலை 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

தரம் ஒன்று மாணவர்களுக்கு பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்