Back to homepage

Tag "இறக்காமம்"

இறக்காமம் பிரதேச சபை செயலாளராக, அட்டாளைச்சேனை சிஹாபுத்தீன் கடமையேற்பு

இறக்காமம் பிரதேச சபை செயலாளராக, அட்டாளைச்சேனை சிஹாபுத்தீன் கடமையேற்பு 0

🕔14.Mar 2024

– முன்ஸிப் – இறக்காமம் பிரதேச சபையின் செயலாளராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுத்தீன் சிஹாபுத்தீன் இன்று (14) கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அதிசிறப்புத் தரத்துக்கான (Supra grade) பரீட்சையில் கடந்த வருடம் இவர் சித்தியடைந்தமையினை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அதிசிறப்புத் தரத்துக்கான பரீட்சையில் – கடந்த

மேலும்...
பண்ணையைப் பார்க்கச் சென்றவர், கரும்புக் காணியிலிருந்து சடலமாக மீட்பு: வாங்காமத்தில் சம்பவம்

பண்ணையைப் பார்க்கச் சென்றவர், கரும்புக் காணியிலிருந்து சடலமாக மீட்பு: வாங்காமத்தில் சம்பவம் 0

🕔24.Dec 2023

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகுதியிலுள்ள கரும்புக் காணியொன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இனம் தெரியாத நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இறக்காமம் பொலிஸாருக்கு நேற்று (23) கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து, மேலதிக விசாரணைகளை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். இதன் போது

மேலும்...
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து: காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து: காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி 0

🕔19.Nov 2023

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், இன்று (19) பிற்பகல் 3.45 மணியளவில் இறக்காமம் பிரதான வீதியில் வைத்து, மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொத்துவில் உள்ளிட்ட சில பிரதேசங்களில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான்,

மேலும்...
யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்: குடும்பத்துடன் பயணித்த போது நடந்த சோகம்

யானை தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்: குடும்பத்துடன் பயணித்த போது நடந்த சோகம் 0

🕔4.Oct 2023

– பாறுக் ஷிஹான் – காட்டு யானை தாக்கியமை காரணமாக 03 பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்தார். அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நெய்னாகாடு வம்பியடி பகுதியில்  நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு  இச்சம்பவம் இடம்பெற்றது. தனது குடும்பத்துடன் கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக – இறக்காமம் பகுதிக்கு மோட்டார் பைக்கில் பயணம்

மேலும்...
அட்டாளைச்சேனை – இறக்காமம் எல்லைப் பிரச்சினை: கற்சேனை ஏழைகளுக்கு வந்த, பல கோடி ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டம் இல்லாமல் போனது

அட்டாளைச்சேனை – இறக்காமம் எல்லைப் பிரச்சினை: கற்சேனை ஏழைகளுக்கு வந்த, பல கோடி ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டம் இல்லாமல் போனது 0

🕔7.Feb 2023

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் வறிய மக்களுக்கான வீட்டுத் திட்டமொன்றுக்கு, இறக்காமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் காட்டிய எதிர்ப்பின் காரணமாக அந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. குவைத் நாட்டின் நிதியுதவியின் கீழ் ‘அன்நூர்’ எனும் நிறுவனம் மேற்படி வீட்டுத் திட்டத்தை பல கோடி ரூபா

மேலும்...
ரஹ்மத் நகரில் நீர் வழங்கல் அதிகார சபையின் சட்ட விரோத செயற்பாடு; அட்டாளைச்சேனையின் ஒரு பகுதியை இறக்காமத்துக்கு அபகரிக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியா?

ரஹ்மத் நகரில் நீர் வழங்கல் அதிகார சபையின் சட்ட விரோத செயற்பாடு; அட்டாளைச்சேனையின் ஒரு பகுதியை இறக்காமத்துக்கு அபகரிக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியா? 0

🕔29.Dec 2021

– மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ரஹ்மத் நகரிலுள்ள வீதிகள் தோண்டப்பட்டு, குழாய்கள் புதைக்கும் நடவடிக்கையினை நீர் வழங்கல் அதிகார சபை ஆரம்பித்துள்ள நிலையில், அதற்கான அனுமதி – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பெறப்படவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 16ஆம் திகதி தொடக்கம், நீர் வழங்கல் அதிகார சபையினால் ரஹ்மத் நகரிலுள்ள

மேலும்...
கொவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு இறக்காமம், மறிச்சிக்கட்டி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அமைச்சர் வாசு

கொவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு இறக்காமம், மறிச்சிக்கட்டி ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அமைச்சர் வாசு 0

🕔28.Dec 2020

கோவிட் -19 தொற்று காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கான இரண்டு பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேச நாணயகார தெரிவித்துள்ளார். மேற்படி இடங்கள் குறித்த அறிக்கையினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவர் ஒப்படைத்துள்ளார். கோவிட் -19 தொற்று காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு, நிலத்தடி நீர் ஆழமாக உள்ள பகுதிகளை அடையாளம் காணுமாறு

மேலும்...
காணாமல் போன வாழ்க்கையின் வரைபடம்

காணாமல் போன வாழ்க்கையின் வரைபடம் 0

🕔18.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – “கொத்திருக்கோ கொத்து” “என்ன கொத்து” “வேப்பங் கொத்து” “போட்டுட்டு போங்க” “போட்டாலென்ன” “அடிதான் கிடைக்கும்” “அடிங்களன் பார்ப்பம்” “அதையும் பார்ப்பம்” ஆகக் குறைந்தது முப்பது வருடங்களுக்கு முன்னர், சிறுவர்களின் விளையாட்டின் போது இடம்பெற்ற – ராகத்துடனான உரையாடல்தான் மேலேயுள்ளது. வட்டமாக சிறுவர்கள் கூடி நிற்பார்கள். ஒருவர் மட்டும், கையில்

மேலும்...
இறக்காமம் பிரதேச சபை கூட்ட அமர்வுகளில் செய்தி சேகரிக்க, ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை

இறக்காமம் பிரதேச சபை கூட்ட அமர்வுகளில் செய்தி சேகரிக்க, ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை 0

🕔15.Aug 2019

– அஹமட் – இறக்காமம் பிரதேச சபையின் கூட்ட அமர்வுகளுக்கு செய்தி சேகரிக்கும் பொருட்டு, ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஊடகவியலாளர்கள் அமர்வதற்குரிய ஒழுங்குகளும் அங்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் பங்கேற்கும் சபைக் கூட்டங்களில் என்ன பேசுகிறார்கள் என்பதை, வெளியுலகுக்குத் தெரியப்படுத்துதல் அவசியமாகும். வாக்களித்த மக்களும் அதனையே எதிர்பார்கின்றனர்.

மேலும்...
இறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணம்; 05 தடவை கால நீடிப்பு வழங்கியும், கொந்தராத்துக்காரர் அசட்டை

இறக்காமத்தில் இழுத்தடிக்கப்படும் காபட் வீதி நிர்மாணம்; 05 தடவை கால நீடிப்பு வழங்கியும், கொந்தராத்துக்காரர் அசட்டை 0

🕔12.Apr 2019

– மப்றூக், படங்கள்: றிசாத் ஏ காதர் – இறக்காமம் பிரதான வீதியை காபட் வீதியாக நிர்மாணிக்கும் வேலைகள், இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போதும், இதுவரையில் அந்த வீதி நிர்மாணம் நிறைவு செய்யப்படாத காரணத்தினால், சுகாதார அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதேவேளை, இந்த வீதியினை நிர்மாணித்து முடிக்க வேண்டிய

மேலும்...
இறக்காமம் காதி நீதவான், தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்: நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு

இறக்காமம் காதி நீதவான், தான்தோன்றித்தனமாக செயற்படுகிறார்: நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு 0

🕔26.Jan 2019

– றிசாத் ஏ காதர் –இறக்காமம் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வரிப்பத்தான்சசேனை மஜீட்புரம், வாங்காமம் 10, 11ம் பிரிவுகள் மற்றும் நல்ல தண்ணிமலை, குடுவில் ஆகிய கிராமங்களை மையப்படுத்தியதாக நியமிக்கப்பட்ட குவாசி நீதவான் முறைகேடாக நடந்துகொள்வதாக, நீதிச்சேவை ஆணைக்குழுவின் காதிப்பிரிவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள்எழுத்துமூலம் அறிவித்துள்ளனர்.குறித்த காதி நீதவான் மீது அக்கடிததத்தில் பத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.மூன்று

மேலும்...
இறக்காமத்தில் வீதியை விஸ்தரிக்க தடையேற்படுத்தும் தவிசாளரைக் கண்டித்து, கவன ஈர்ப்பு நடவடிக்கை

இறக்காமத்தில் வீதியை விஸ்தரிக்க தடையேற்படுத்தும் தவிசாளரைக் கண்டித்து, கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔14.Jan 2019

– இர்பான் முகைதீன் – இறக்காமம் காபட் வீதி சுற்றுவட்டத்தின் நடுவிலிருந்து, இரண்டு பக்கமும் 12 மீற்றர் வரை வீதியை அகலமாக்குமாக்குவதற்கு, பிரதேச சபையின் தவிசாளர் தடையேற்படுத்தி வருவதைக் கண்டிக்கும் வகையில், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர்  கே.எல். சமீம் தலைமையில் இன்று திங்கட்கிழமை, கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் பொதுமக்கள் ஈடுபட்டனர். குறித்த வீதியை

மேலும்...
இறக்காமம் எல்லையில் நடப்பட்ட, அக்கரைப்பற்று பிரதேச சபையின் பெயர்ப் பலகை தடாலடியாக அகற்றல்

இறக்காமம் எல்லையில் நடப்பட்ட, அக்கரைப்பற்று பிரதேச சபையின் பெயர்ப் பலகை தடாலடியாக அகற்றல் 0

🕔15.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் பிரதேச சபை எல்லையினுள் அக்கரைப்பற்று தவிசாளரால் அத்துமீறி நடப்பட்டதாகக் கூறப்படும் எல்லைப் பலகை, இறக்காமம் பிரதேச சபைத்தவிசாளர் தலைமையில் இன்று சனிக்கிழமை மாலை தடாலடியாக அகற்றப்பட்டது. இறக்காமம் பிரதேச சபையில் இன்று சனிக்கிழமை அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், மேற்படி எல்லைப் பலகை அகற்றும் நடவடிக்கை இடம் பெற்றது. இதன்போது

மேலும்...
மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, பிரேரணை நிறைவேற்றம்

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, பிரேரணை நிறைவேற்றம் 0

🕔11.Dec 2018

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இறக்காமம் பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் மௌலவி நௌபர் இப்பிரேரனையை சபையில் இன்று செவ்வாய்கிழமை சமர்ப்பித்து உரையாற்றினார். “முஸ்லிம் சமூகத்தின் தேசிய அளவிலான தலைவராக றிசாட் பதியுதீன் மக்களால் பார்க்கப்படுகிறார். அ.இ.ம.காங்கிரஸ்

மேலும்...
இறக்காமம் காபட் வீதி வேலைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு

இறக்காமம் காபட் வீதி வேலைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு 0

🕔4.Dec 2018

– அஹமட் – இறக்காமம் பிரதான வீதியை, காபட் வீதியாக அமைக்கும் செயற்பாடுகள் மிக நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வீதி வேலை முடிவுறாமைக்கு எதிராக தமண பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அமைப்பாளர் கே.எல். சமீம், இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளார். கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்