
பொரல்ல – மகசின் சிறைச்சாலையில் நேற்று இரவு (06) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டத்தை அடுத்து, சிறைச்சாலைக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இரவு 10:20 மணியளவில், ‘E’ வார்டில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவினர், திடீரென வார்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேறி, கலவரமாகவும் ஒழுங்கற்ற முறையிலும் நடந்துகொள்ளத் தொடங்கியபோது இந்த அமைதியின்மை ஆரம்பமானதாகக் கூறப்படுகிறது.

கைதிகளிடையே ஏற்பட்ட சட்டவிரோத போதைப்பொருட்கள் தொடர்பான தகராறே, இந்த மோதலுக்கும் அதைத் தொடர்ந்த அமைதியின்மைக்கும் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர – பொலிஸார், பொலிஸ் கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.
நேற்று இரவு தகவலின்படி, அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், சிறை வளாகத்திற்குள் பாதுகாப்பு மீண்டும் நிலைநாட்டப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.


