
அமெரிக்காவிடம் மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பென்டகனின் ஏவுகணைக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறும் ஊடகச் செய்திகளை நிராகரித்துள்ள அவர், தகவல்களைக் கசியவிடுபவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார் சொல்கிறார்.

ராணுவம் மிகப்பெரிய கையிருப்புகளைப் பராமரித்து வருவதாகவும், உற்பத்தியை வேகமாக விரிவுபடுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அமெரிக்காவிடம், குறிப்பாக சில குறிப்பிட்ட வகைகளில், மிகப்பெரிய அளவில் வெடிமருந்துகள் உள்ளன” என்று ட்ரம்ப் – ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“கூடுதலாக, தேவைக்கேற்ப அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகின்றன.
பாதுகாப்பு நிறுவனங்கள் நமது நாட்டின் வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான ஆலைகளையும் தொழிற்சாலைகளையும் கட்டி வருகின்றன” என்றும் அவர் எழுதியுள்ளார்.
இந்த ஊடகச் செய்திகளுக்குப் பின்னால் உள்ளவர்களை அமெரிக்க ஜனாதிபதி கடுமையாகச் சாடினார், இதற்குப் பொறுப்பானவர்கள் சட்டரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.
இந்த தேசத்துரோக அறிக்கைகளைக் ‘கசியவிட்டவர்கள் வேட்டையாடப்படுவார்ர்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர்; நீண்ட கால சிறைத் தண்டனை அவ்வாறானவர்களுக்கு பெற்று கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



