ரஷ்ய படைகள், யுக்ரேன் எல்லையிலிருந்து திருப்பியழைக்கப்படுவதாக தெரிவிப்பு: கள நிலைவரம் என்ன?

ரஷ்ய படைகள், யுக்ரேன் எல்லையிலிருந்து திருப்பியழைக்கப்படுவதாக தெரிவிப்பு: கள நிலைவரம் என்ன? 0

🕔15.Feb 2022

ரஷ்யா- பெப்ரவரி 16ஆம் திகதி யுக்ரேன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது என்று சில மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் சூழலில், அந்த நாளன்று யுக்ரேன் மக்கள் ஒற்றுமையுடன், தேசிய கொடியை ஏற்றி, தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்று, அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். ”மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை யுக்ரேன்

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் கையெழுத்துப் போராட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பில்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் கையெழுத்துப் போராட்டம்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் 0

🕔15.Feb 2022

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் (15) கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது. கையெழுத்து பெற்றுக்கொள்ளும் இந்த நடவடிக்கை, இன்று காலை 11 மணி முதல் பிற்பல் 01 மணி வரையில் இடம்பெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இதில் அனைரையும் இணைந்து கொள்ளுமாறு சர்வஜன நீதி

மேலும்...
பெண் அதிபரை மண்டியிட வைத்த வழக்கு: ஐந்து வருடங்களின் பின்னர் முடிவுக்கு வந்தது

பெண் அதிபரை மண்டியிட வைத்த வழக்கு: ஐந்து வருடங்களின் பின்னர் முடிவுக்கு வந்தது 0

🕔15.Feb 2022

பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிட வைத்ததாக கூறப்படும் வழக்கில், ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த வழக்கு இன்று (15) பதுளை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபர் பவானி ரகுநாதன் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பதுளை

மேலும்...
ஊடகவியலாளர் சமுதித்த வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலை கேலி செய்து, அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன்  பேஸ்புக் பதிவு

ஊடகவியலாளர் சமுதித்த வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலை கேலி செய்து, அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன் பேஸ்புக் பதிவு 0

🕔15.Feb 2022

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கேலி செய்யும் வகையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன் ‘பேஸ்புக்’கில் பதிவொன்றை இட்டதாக ‘ஏசியன் மிரர்’ ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர் சரத் வீரசேகரவின் மகன் சசித்திர வீரசேகர பொலிஸ் துறையில் வைத்தியராகக் கடமையாற்றி வருகின்றார். பிரபல தொலைக்காட்சி ஊடகவியலாளர் சமுதித்த

மேலும்...
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சஜித் பிரேமதாஸ விஜயம்: 03 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கையளிப்பு

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சஜித் பிரேமதாஸ விஜயம்: 03 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் கையளிப்பு 0

🕔15.Feb 2022

– நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் – ஐக்கிய மக்கள் சக்தியின் ஒருங்கிணைவாக, ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘ஜன சுவய’ சமூக நலத்திட்டத்தின் ஊடாக, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சுமார் 03 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின்ட சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர்

மேலும்...
ஷெஹான் மாலக்க, பிணையில் விடுவிப்பு

ஷெஹான் மாலக்க, பிணையில் விடுவிப்பு 0

🕔15.Feb 2022

சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக விசாரணை செய்ய நேற்றைய தினம் (14) குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்திருந்தனர். இன்றைய தினம் அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, பிணை வழங்கப்பட்டுள்ளது. தொடர்பான செய்தி: ஈஸ்டர் தாக்குதல்

மேலும்...
நாளாந்த மின்வெட்டு: இன்று தொடக்கம் அமுலாகலாம்

நாளாந்த மின்வெட்டு: இன்று தொடக்கம் அமுலாகலாம் 0

🕔15.Feb 2022

நாளாந்த மின் வெட்டு இன்று (15) தொடக்கம் அமுல்படுத்தப்படக் கூடும் என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீர் மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த மின்வெட்டு அமுல் செய்யப்படுக் கூடும். இதற்கமைய, மின் வெட்டு அமுல்படுத்தப்படும் வழிமுறைகள் இன்று பிற்பகல் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பேசி வந்த, சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கைது

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பேசி வந்த, சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கைது 0

🕔14.Feb 2022

சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு, ஷெஹான் மாலக கமகே 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்தார். ஈஸ்டர் தாக்குதல் – ஓர் அரசியல் சதி என்று கூறிய கமகே, இது குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை

மேலும்...
இலங்கை மின்சார சபைக்கு தலா 10 லட்சம் ரூபா சம்பளத்தில் ஆலோசகர்கள் இருவர் நியமனம்

இலங்கை மின்சார சபைக்கு தலா 10 லட்சம் ரூபா சம்பளத்தில் ஆலோசகர்கள் இருவர் நியமனம் 0

🕔14.Feb 2022

மின்சக்தி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கலாநிதி சுசந்த பெரேரா மற்றும் முன்னாள் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க ஆகியோரை தலா 10 லட்சம் ரூபா மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆலோசகர்களாக நியமிக்க இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர். மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த

மேலும்...
சாதாரண தரத்தில் சித்தியடையாதோருக்கு, தொழில் பயிற்சிக்கு உட்படுத்தி வேலை வாய்ப்பு வழங்க திட்டம்

சாதாரண தரத்தில் சித்தியடையாதோருக்கு, தொழில் பயிற்சிக்கு உட்படுத்தி வேலை வாய்ப்பு வழங்க திட்டம் 0

🕔14.Feb 2022

2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழிற் பயிற்சிக்கு உட்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கும் நடைமுறை ஒன்றை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் இந்த வேலைத்திட்டம், திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண

மேலும்...
கம்பன்பிலவின் இல்லத்துக்கு, அரச செலவில் 20 லட்சம் ரூபா பெறுமதியான ஜெனரேட்டர்

கம்பன்பிலவின் இல்லத்துக்கு, அரச செலவில் 20 லட்சம் ரூபா பெறுமதியான ஜெனரேட்டர் 0

🕔13.Feb 2022

அமைச்சர் உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், 20 கேவிஏ (KVA) டீசல் ஜெனரேட்டர் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு எரிசக்தி அமைச்சு அண்மையில் அனுமதி வழங்கியதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய களஞ்சியப்படுத்தல் முனையத்தின் (Ceylon Petroleum Storage Terminal Limited) ஆவணங்களின் படி, மேற்படி ஜெனரேட்டருக்கு

மேலும்...
உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு சஊதி  அரேபிய தூதரகம் தமது பிரஜைகளுக்கு அறிவிப்பு

உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு சஊதி அரேபிய தூதரகம் தமது பிரஜைகளுக்கு அறிவிப்பு 0

🕔13.Feb 2022

உக்ரைனில் உள்ள சஊதி அரேபிய பிரஜைகள், உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு உக்ரைன் தலைநகர் கிய்வில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. உக்ரைனில் இருந்து உடனடியாக புறப்படுவதற்கு வசதியாக சஊதி தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் தூதரகம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், ரஷ்ய படையெடுப்பு அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாக, உக்ரைனுக்கு செல்ல விரும்பும் சவூதி

மேலும்...
இறந்து கொண்டிருக்கும் சூரியன் ஒன்றுக்கு அருகில், உயிர்கள் வாழத் தகுதியான கோள்: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு

இறந்து கொண்டிருக்கும் சூரியன் ஒன்றுக்கு அருகில், உயிர்கள் வாழத் தகுதியான கோள்: ஆராய்ச்சியாளர்கள் தெரிவிப்பு 0

🕔13.Feb 2022

இறந்துகொண்டிருக்கும் சூரியனுக்கு அருகில் இருக்கும் ஒரு கிரகத்தில் உயிர்கள் வாழத் தகுதியான சாத்தியங்கள் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இது உறுதிசெய்யப்பட்டால், ‘வைற் டார்ஃப்’ (white dwarf) என்று அழைக்கப்படும் அத்தகைய நட்சத்திரத்தை உயிர்கள் வாழும் சூழலைக் கொண்டுள்ள கோள் ஒன்று சுற்றிவருவது கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தக் கோள் – நட்சத்திரத்தின் ‘உயிர்கள்

மேலும்...
18 சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தத்திலிருந்து, அரச தாதியர் சங்கம் விலகியது

18 சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தத்திலிருந்து, அரச தாதியர் சங்கம் விலகியது 0

🕔12.Feb 2022

தாதியர்கள் முன்னெடுத்து வரும் வேலை நிறுத்தத்திலிருந்து, அரச தாதியர் சங்கம் விலகுவதாக அச்சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக, இச்சங்கம் மேற்படி முடிவை எடுத்துள்ளது. 18 தொழிற் சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தில் இருந்து, அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் இவ்வாறு விலக தீர்மானித்துள்ளது. கடந்த 07ஆம் திகதி

மேலும்...
எரிபொருட்களுக்கு விலை அதிகரிப்பது தொடர்பில், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் கோரிக்கை

எரிபொருட்களுக்கு விலை அதிகரிப்பது தொடர்பில், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் கோரிக்கை 0

🕔12.Feb 2022

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மீளவும் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு இந்தக் கோரிக்கையை அனுப்பி வைத்துள்ளதாக, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். குறித்த கோரிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்