முகத்தை மூடும் முக்காடு; ஏற்பும், மறுப்பும்: உலகளவில் நிலைமை என்ன?

முகத்தை மூடும் முக்காடு; ஏற்பும், மறுப்பும்: உலகளவில் நிலைமை என்ன? 0

🕔12.Feb 2022

இந்தியாவின் கர்நாடகாவிலுள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இது தொடர்பான விசாரணை கர்நாடக மேல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தீர்வு காணாத வரையில், ஹிஜாப் அல்லது காவி மேல்துண்டு எதுவாக இருந்தாலும், மதம் சார்ந்த உடைகளுக்கு கல்லூரிகளில் அனுமதி இல்லை என மேல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேல் நீதிமன்றத்தின்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம்; வடைகளை வாயால் சுடுவதில்லை: கொஞ்சம் கசப்பான விமர்சனம் 0

🕔12.Feb 2022

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அதன் 14ஆவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நிறைவு செய்திருக்கிறது. 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இப்போது 27 வயதாகிறது. பல்கலைக்கழகமொன்று அமைந்திருக்கும் இடம், அங்கு பெரும்பான்மையாக வாழும் சமூகம் ஆகியவை, அந்தப் பல்கலைக்கழகத்தின் முகமாக அமைந்து விடுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர் சமூதாயத்தின் முகமாகத் தெரிவது போல்,

மேலும்...
மரணித்த பிச்சைக்காரரின்  காற்சட்டைப் பைகளிலிருந்து 04 லட்சம் ரூபாய் மீட்பு

மரணித்த பிச்சைக்காரரின் காற்சட்டைப் பைகளிலிருந்து 04 லட்சம் ரூபாய் மீட்பு 0

🕔11.Feb 2022

பிச்கைக்காரர் ஒருவர் இறந்த நிலையில், அவரின் கால்சட்டைப் பையில் இருந்து 04 லட்சம் ரூபா பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹக்மன பிரதேசத்தில் வசித்து வந்த, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவரே நேற்று (10) உயிரிழந்தார். இதனையடுத்து அவரது கால்சட்டை பைகளில் கிட்டத்தட்ட 400,000 ரூபாய் கண்டெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 69 வயதான ஹக்மான கொங்கல.தி.

மேலும்...
ஜனாபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளை ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடனும் முறுகல்

ஜனாபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளை ஆர்ப்பாட்டம்: பொலிஸாருடனும் முறுகல் 0

🕔11.Feb 2022

வவுனியா பல்கலைக்கழகத்தைத் திறந்து வைப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தினம் (11) அங்கு சென்றிருந்தபோது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. நாட்டின் 17ஆவது பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்தபோது அங்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைக்கழகத்துக்குள்

மேலும்...
அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருந்துச் சீட்டுகளுக்கு, ஒசுசலவில் மருந்துகள் வழங்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படும் மருந்துச் சீட்டுகளுக்கு, ஒசுசலவில் மருந்துகள் வழங்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு 0

🕔11.Feb 2022

அரச வைத்தியசாலைகளினால் வழங்கப்படும் மருந்து சீட்டுகளுக்கு ஒசுசல (இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனம்) விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும் என ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ‘ஒசுசல’ விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பல்வேறு

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை: சர்வதேசத்தை ஏமாற்ற வேண்டாம்: றிசாட் பதியுதீன்

பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை: சர்வதேசத்தை ஏமாற்ற வேண்டாம்: றிசாட் பதியுதீன் 0

🕔10.Feb 2022

பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தத்தில் எந்த விதமான மாற்றங்களையும் தாம் காணவில்லை எனவும், இதன்மூலம் சர்வதேசத்தை ஏமாற்றி விட முடியும் என்று நினைக்காமல் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை முன்னிறுத்தி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை  மேற்கொள்வதே காலத்தின் தேவை என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலம்,  வெளிவிவகார அமைச்சர்

மேலும்...
உயர்தரப் பரீட்சையில் இரு மாணவர்களுக்கு வினாத்தாளின் இரண்டாம் பாகம் வழங்கப்படாமை தொடர்பில் முறைப்பாடு

உயர்தரப் பரீட்சையில் இரு மாணவர்களுக்கு வினாத்தாளின் இரண்டாம் பாகம் வழங்கப்படாமை தொடர்பில் முறைப்பாடு 0

🕔10.Feb 2022

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் நேற்று இடம்பெற்ற சித்திர பாடத்துக்குத் தோற்றிய மாணவர்கள் இருவருக்கு, அந்த பரீட்சையின் இரண்டாம் பாகம் வினாத்தாள் கிடைக்கவில்லை என முறையிடப்பட்டுள்ளது. கம்பஹா வலய கல்வி காரியாலயத்தில் இந்த முறைப்பாடு பதிவாகியுள்ளது. கம்பஹா தக்ஸிலா வித்தியாலயத்தில் ஒரே மண்டபத்தில் தோற்றிய இரண்டு மாணவர்களுக்கே இவ்வாறு குறித்த வினாப்பத்திரம் வழங்கப்படவில்லையென அந்த

மேலும்...
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி 0

🕔9.Feb 2022

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹை பிணையில் விடுவிக்க புத்தளம் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சுமார் 21 மாதங்களாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சார்பில் முன்னதாக புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, குறித்த உத்தரவை திருத்த கோரி,

மேலும்...
அக்கரைப்பற்று; நீதவான் வீட்டுக் கொள்ளை தொடர்பில் 08 பேர் கைது: 528 கிராம் தங்க நகைகள் மீட்பு: தொடர்கிறது வேட்டை

அக்கரைப்பற்று; நீதவான் வீட்டுக் கொள்ளை தொடர்பில் 08 பேர் கைது: 528 கிராம் தங்க நகைகள் மீட்பு: தொடர்கிறது வேட்டை

🕔9.Feb 2022

– மப்றூக் – அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் த. கருணாகரன் வீடு உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 528 கிராம் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கரைப்பற்றிலுள்ள நீதவான் வீட்டில் கொள்ளையிடப்பட்ட அவரின் மனைவியினுடைய 12 பவுண் தாலிக் கொடியும், அதே பகுதியிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரின் வீட்டில் திருடப்பட்ட 11

மேலும்...
“அதிபரும் விரிவுரையாளர்களும் என்னைப் பாதுகாத்தனர்”: ஹிஜாப் அணிந்தமைக்காக, கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட மாணவி பீபி முஸ்கான் பிரத்தியேகப் பேட்டி

“அதிபரும் விரிவுரையாளர்களும் என்னைப் பாதுகாத்தனர்”: ஹிஜாப் அணிந்தமைக்காக, கல்லூரிக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட மாணவி பீபி முஸ்கான் பிரத்தியேகப் பேட்டி 0

🕔9.Feb 2022

இந்தியா – கர்னாடகாவிலுள்ள கல்லூரியொன்றில் கற்கும் பீபி முஸ்கான் எனும் முஸ்லிம் மாணவி – ஹிஜாப் அணிந்து வந்தமைக்காக, கல்லூரிக்குள் நுழைய விடாமல் ஜெய்ஸ்ரீராம் எனும் கோசமிட்டு வந்த சிலரால் தடுக்கப்பட்டபோது; தன்னை கல்லூரியின் அதிபரும் அனைத்து விரிவுரையாளர்களும் பாதுகாத்ததாக அந்த மாணவி தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து இயங்கும் என்.டி.ரி.வி (NDTV) தொலைக்காட்சிக்கு ஆங்கிலத்தில் அவர் வழங்கிய

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருகின்றார்: நாடாளுமன்றில் சாணக்கியன்

கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருகின்றார்: நாடாளுமன்றில் சாணக்கியன் 0

🕔8.Feb 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹில்லரைப் போன்று ஆட்சி நடத்தி வருவதாக, நாடாளுமுன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் இன்று (08) நாடாளுமன்றி குற்றஞ்சாட்டினார். “ஹிட்லர் தனது கடைசி காலத்தில் – ஜேர்மானியர்கள் எத்தனை பேர் இறந்தாலும் பரவாயில்லை என்று தனது கொள்கையை செயற்படுத்தி வந்தார்” எனவும் இதன்போது சாணக்கியன் கூறினார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்; “நாட்டில் சுகாதார பணியாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் அதேநேரம், பொது வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

மேலும்...
பஹ்மிதா: பொய்யான செய்தி வெளியிட்ட தினக்குரல், காலைக்கதிர் பத்திரிகைகளிடம் நஷ்டஈடு கோரி கடிதம்

பஹ்மிதா: பொய்யான செய்தி வெளியிட்ட தினக்குரல், காலைக்கதிர் பத்திரிகைகளிடம் நஷ்டஈடு கோரி கடிதம் 0

🕔8.Feb 2022

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு கடமையேற்கச் சென்று கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ், அது சம்பந்தமாக செய்தி வெளியிட்ட காலைக்கதிர் மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் பொய்யான தகவலை பிரிசுரித்தததாகக் கூறி ஒவ்வொரு பத்திரிகையிடமிருந்தும் தலை பதினைந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கோரியுள்ளார். இதற்கான கோரிக்கைக் கடிததங்களை குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி அஸ்ஹர்

மேலும்...
ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது 0

🕔8.Feb 2022

ஒரு கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலை வீதியில் நேற்று (07) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இவர் கைது செய்யப்பட்டார். இதன்போது, சந்தேகநபரான பெண்ணிடமிருந்து ஒரு கிலோ 64 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளனது. சந்தேக நபர்

மேலும்...
குதிரை ஓடினால், வாழ்நாள் தடை

குதிரை ஓடினால், வாழ்நாள் தடை 0

🕔7.Feb 2022

‘குதிரை ஓடுதல்’ எனக் கூறப்படும் பரீட்சைகளில் ஆள்மாறாட்டம் செய்யும் குற்றத்தைப் புரிபவர்களுக்கு, பரீட்சை எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்தார். கொவிட்- 19 தொற்றினால் பிற்போடப்பட்ட கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை இன்று (07) ஆரம்பமாகிய நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம்

மேலும்...
கல்முனை இளம் முயற்சியாண்மையாளர்களின் சம்மேளனம் ஆரம்பம்

கல்முனை இளம் முயற்சியாண்மையாளர்களின் சம்மேளனம் ஆரம்பம் 0

🕔7.Feb 2022

– எம்.என்.எம். அப்ராஸ் – கல்முனை இளம் முயற்சியாண்மையாளர்களின் சம்மேளனம் எனும் வர்த்தக அமைப்பொன்று அண்மையில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. தன்நிறைவு கண்ட முயற்சியாண்மையாளர்களை உருவாக்கும் நோக்கிலேயே இந்த சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சம்மேளனத்தின் தலைவராக றிசாத் ஷெரீப், பொதுச் செயலாளராக எம்.எச்.எம்.ஹனீப் மற்றும் பொருளாளராக ஏ.ஆர். றிஸ்வான் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்மேளனத்தின் பொதுசன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்