பஹ்மிதா: பொய்யான செய்தி வெளியிட்ட தினக்குரல், காலைக்கதிர் பத்திரிகைகளிடம் நஷ்டஈடு கோரி கடிதம்

🕔 February 8, 2022

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு கடமையேற்கச் சென்று கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ், அது சம்பந்தமாக செய்தி வெளியிட்ட காலைக்கதிர் மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் பொய்யான தகவலை பிரிசுரித்தததாகக் கூறி ஒவ்வொரு பத்திரிகையிடமிருந்தும் தலை பதினைந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கோரியுள்ளார்.

இதற்கான கோரிக்கைக் கடிததங்களை குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி அஸ்ஹர் லதீப் மூலம் அனுப்பிவைத்துள்ளார்.

காலைக்கதிர் பத்திரிகை 03ம் திகதிப் பதிப்பிலும் தினக்குரல் இணையத்தளத்திலும் குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றி வெளியிடப்பட்ட செய்திகளில், தான் ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முகமூடி அணிந்து சென்றதாக சொல்லப்பட்டிருந்ததாகவும், தனது வாழ் நாளிலே ஒருபோதும் தான் முகமூடி அணிந்தில்லை எனவும், தன்னுடைய கடிதத்தில் பஹ்மிதா குறிப்பிட்டுள்ளார்.

இப் பொய்யான செய்தியானது தனது கௌரவத்துக்கும் மானத்துக்கும் பங்கம் விளைவித்தமையினால், இரண்டு பத்திரிகைகளிடமும் தனக்கு நஷ்ட ஈடாக தலா பதினைந்து லட்சம் நட்ட ஈடு கோரியுள்ளார்.

குறிப்பிட்ட கோரிக்கைக் கடிதங்கள் குரல்கள் இயக்க சட்டத்தரணி அஸ்ஹர் லத்தீப் ஊடாக இரு பத்திரிகை ஆசிரியர்களுக்கும் இன்று (08) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்