ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பேசி வந்த, சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கைது

🕔 February 14, 2022

மூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, ஷெஹான் மாலக கமகே 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல் – ஓர் அரசியல் சதி என்று கூறிய கமகே, இது குறித்து விசாரணை நடத்துமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு இலங்கை கத்தோலிக்க திருச்சபையால் முன்மொழியப்பட்ட கறுப்புக் கொடி பிரச்சாரத்தை ஏற்பாடு செய்வதிலும் சமூக ஆர்வலர் ஷெஹான் முக்கிய பங்காற்றினார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில், ஓகஸ்ட் 2021 இல், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் விசாரிக்கப்பட்டார்.

ஷெஹான் மாலக கமகே இன்று கைது செய்யப்பட்ட போதிலும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கான சரியான காரணத்தை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்