ரஷ்ய படைகள், யுக்ரேன் எல்லையிலிருந்து திருப்பியழைக்கப்படுவதாக தெரிவிப்பு: கள நிலைவரம் என்ன?

🕔 February 15, 2022
ரஷ்ய யுத்த தாங்கிகள்

ஷ்யா- பெப்ரவரி 16ஆம் திகதி யுக்ரேன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது என்று சில மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் சூழலில், அந்த நாளன்று யுக்ரேன் மக்கள் ஒற்றுமையுடன், தேசிய கொடியை ஏற்றி, தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்று, அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.

”மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை யுக்ரேன் அதிபர் உறுதிசெய்யவில்லை; அந்தச் செய்திகள் குறித்து சந்தேகம் வெளியிடும் நோக்கிலேயே வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இவ்வாறு மக்களிடம் கோரியுள்ளார்,” என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே யுக்ரேன் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தங்கள் நாட்டு படைகள், தங்களது நிலைக்கே மீண்டும் திரும்பி வருவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.

இது யுக்ரேன் – ரஷ்யா இடையிலான மோதல் நிலையை குறைக்கும் என்ற நம்பிக்கையை தந்தாலும், எந்த எண்ணிக்கையில் ரஷ்யா படைகளைத் திரும்ப அழைத்துள்ளது என்று இன்னும் தெளிவாகவில்லை.

ரஷ்யா தனது படைகள் அனைத்தையும் யுக்ரேன் எல்லையில் இருந்து விலக்க வேண்டும் என்று, யுக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரி குலேபா கூறியுள்ளார்.

“எங்களுக்கு ஒரு விதி உள்ளது. எதைக் கேட்கிறீர்களோ அதை நம்பக்கூடாது; எதைப் பார்க்கிறார்களோ அதைத்தான் நம்ப வேண்டும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

”படைகள் பின்வாங்கியது என்றால் மோதல் நிலை குறைகிறது என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்