கொரோனா பாதிப்பு: மீண்டும் 05 ஆயிரம் ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானம்

கொரோனா பாதிப்பு: மீண்டும் 05 ஆயிரம் ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔28.May 2021

கொரோனா பாதிப்பு மற்றும் நடமாட்டத் தடை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, ஜூன் மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சமுர்த்தி பெறுநர்கள், தொழில் இழந்தோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இவ்வாறு நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக 30 மில்லியன் ரூபாவினை

மேலும்...
மொரட்டுவ மாநகர சபை மேயர் கைது; நண்பர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு ‘டோக்கன்’ வழங்கியதால் தகராறு

மொரட்டுவ மாநகர சபை மேயர் கைது; நண்பர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு ‘டோக்கன்’ வழங்கியதால் தகராறு 0

🕔28.May 2021

மொரட்டுவ மாநகர சபையின் மேயர் சமன் லால் பெனாண்டோ இன்று வெள்ளிக்கிழமை கல்கிசை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் மேயர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மொரட்டுமுல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு மேயர் இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தன்னால்

மேலும்...
போதைப்பொருள் வியாபாரிகள் கல்முனையில் கைது: பொலிஸாரை வசியம் செய்ய எடுத்து வந்த நடவடிக்கையும் அம்பலம்

போதைப்பொருள் வியாபாரிகள் கல்முனையில் கைது: பொலிஸாரை வசியம் செய்ய எடுத்து வந்த நடவடிக்கையும் அம்பலம் 0

🕔27.May 2021

– பாறுக் ஷிஹான் – போதைப் பொருட்களை சூட்சுமமாக  நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த 08 பேர் கொண்ட குழு கல்முனையில் கைது செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் கல்முனையில் வாடகை வீடு ஒன்றினை பெற்று, இந்த நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளனர். கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் வாடகை வீடொன்றில் குறித்த குழுவினை சேர்ந்த

மேலும்...
மக்கள் காங்கிரஸிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்க, மூன்று பேரைக் கொண்ட குழு நியமனம்

மக்கள் காங்கிரஸிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்க, மூன்று பேரைக் கொண்ட குழு நியமனம் 0

🕔27.May 2021

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின்  சட்டமூலத்துக்கு ஆதரவாக  வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விசாரிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன் தெரிவித்துள்ளார். மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரால், கட்சியின் யாப்புக்கு அமைவாக, மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளனர். அகில இலங்கை மக்கள்

மேலும்...
வெளியில் செல்லும் போது, ஜுலை தொடக்கம் முகக் கவசங்கள் தேவையில்லை: தென்கொரியா அறிவிப்பு

வெளியில் செல்லும் போது, ஜுலை தொடக்கம் முகக் கவசங்கள் தேவையில்லை: தென்கொரியா அறிவிப்பு 0

🕔27.May 2021

கொவிட் தொற்றுக்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள், எதிர்வரும் ஜூலை மாதம் முதல், வெளியில் செல்லும்போது முகக் கவசங்கள் அணியத் தேவையில்லை என்று தென் கொரியா நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்துக்குள் தென் கொரியா தனது 52 மில்லியன் மக்களில் குறைந்தது 70 வீதமானோருக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், வயதானவர்களுக்கு

மேலும்...
எக்ஸ் ப்ரஸ் பேர்ல் கப்பலில் தொடர்ந்தும் தீ: அமில மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு

எக்ஸ் ப்ரஸ் பேர்ல் கப்பலில் தொடர்ந்தும் தீ: அமில மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு 0

🕔27.May 2021

கொழும்பு துறைமுகத்துக்கு உட்பட்ட கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பரவல் ஏற்பட்ட எம்.வி எக்ஸ் ப்ரஸ் பேர்ல் (X-Press Pearl)  கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது குறித்த கப்பல் முழுவதிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் பணிகளில் கடற்படை, துறைமுக அதிகார சபை உள்ளிட்ட தரப்பினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்...
வெசாக் தினத்தையொட்டி ஜனாதிபதி மன்னிப்பில் 260 சிறைக் கைதிகளுக்கு விடுதலை: 53 பேர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டோர்

வெசாக் தினத்தையொட்டி ஜனாதிபதி மன்னிப்பில் 260 சிறைக் கைதிகளுக்கு விடுதலை: 53 பேர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டோர் 0

🕔26.May 2021

வெசாக் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுவதை கருத்திற் கொண்டு 260 கைதிகள் ஜனாதிபதி வழங்கிய மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆயுள் தண்டனை அனுபவித்த 53 கைதிகளுக்கு ஜனாதிபதியின் சிறப்பு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுவது, 19 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். ஆயுள் தண்டனை

மேலும்...
புதிய சட்ட மா அதிபராக சஞ்சய ராஜரத்தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

புதிய சட்ட மா அதிபராக சஞ்சய ராஜரத்தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் 0

🕔26.May 2021

புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்தினம் இன்று பிற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. புதிய சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் – நாட்டின் 48வது சட்ட மா அதிபர் ஆவார். சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 34 வருட

மேலும்...
நாட்டுக்குள் வருவதற்கான பயணத் தடை 01ஆம் திகதி தொடக்கம் நீக்கம்

நாட்டுக்குள் வருவதற்கான பயணத் தடை 01ஆம் திகதி தொடக்கம் நீக்கம் 0

🕔26.May 2021

இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக பயணத் தடையை ஜூன் 01ஆம் திகதி தொடக்கம் நீக்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று, இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபாலி தர்மதாச தெரிவித்தார். கொரோனா தொற்றினுடைய

மேலும்...
சம்மாந்துறை பாடசாலையில் திருடப்பட்ட பெறுமதியான பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்களும் அகப்பட்டனர்

சம்மாந்துறை பாடசாலையில் திருடப்பட்ட பெறுமதியான பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்களும் அகப்பட்டனர் 0

🕔25.May 2021

– நூருல் ஹுதா உமர் – சம்மாந்துறை அல் – அர்ஷாத் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரை, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பாடசாலை அலுவலகத்தில் இருந்த பொருட்கள் கடந்த 18ஆம் திகதி திருடப்பட்டுள்ளதாக

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் மற்றும் அவரின் மனைவிக்கு கொவிட் தொற்று

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் மற்றும் அவரின் மனைவிக்கு கொவிட் தொற்று 0

🕔25.May 2021

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம், அவர் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று செவ்வாய்கிழமை தெரியவந்துள்ளது. இதேவேளை அவரின் மனைவியும் கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவரின் மனைவியும் நேற்று முன்தினம்

மேலும்...
கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர், தனியார் பஸ் உரிமையாளர்களைப் பழி வாங்குவதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர், தனியார் பஸ் உரிமையாளர்களைப் பழி வாங்குவதாக குற்றச்சாட்டு 0

🕔24.May 2021

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் வங்கிக்கடனை பெறும் பொருட்டு, பஸ் உரிமையாளர்களினால் கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை, உரிய வங்கிகளுக்கு வழங்காமல், மேற்படி அதிகார சபையின் தற்காலிக திட்டமிடல் பணிப்பாளர் இழுத்தடித்து வருவதாக, தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.எஸ். பைறூஸ் குற்றஞ்சாட்டுகிறார். பஸ்

மேலும்...
வாகன இறக்குமதி தொடர்பில், இன்று அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

வாகன இறக்குமதி தொடர்பில், இன்று அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் 0

🕔24.May 2021

வாகனங்களை குறைந்த எண்ணிக்கையில் இறக்குமதி செய்வதற்கு அல்லது வாகனங்களின் இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக, இன்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. தற்போது நாட்டில்

மேலும்...
புத்தளம் நகர சபைத் தலைவர் பாயிஸ் காலமானார்

புத்தளம் நகர சபைத் தலைவர் பாயிஸ் காலமானார் 0

🕔23.May 2021

புத்தளம் நகர சபைத் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கே.ஏ. பாயிஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவருக்கு வயது 52 ஆகிறது. தனது தோட்டக்காணிக்குச் சென்று திரும்புகையில் இவர் வாகனத்தில் இருந்து தவறி வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இதன்பின்னர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் காலத்திலிருந்து, அந்தக் கட்சியின்

மேலும்...
மக்கள் காங்கிரஸ் எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம்

மக்கள் காங்கிரஸ் எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம் 0

🕔23.May 2021

– ஹனீக் அஹமட் – அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினராக தான் அங்கம் வகிப்பதனாலும், அந்தக் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக இருப்பதனாலும், துறைமுக நகர சட்டமூலத்துக்கு வாக்களித்தமை தொடர்பில் தனக்கு எதிராக அந்தக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் என, நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இருந்தபோதும் தான் முஸ்லிம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்