நாடாளுமன்ற உறுப்பினர் நளின் மற்றும் அவரின் மனைவிக்கு கொவிட் தொற்று

🕔 May 25, 2021

க்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம், அவர் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று செவ்வாய்கிழமை தெரியவந்துள்ளது.

இதேவேளை அவரின் மனைவியும் கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவரின் மனைவியும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டதாக தெரியவந்தது.

இந்த நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே சஜித் பிரேமதாஸவுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தானும் தனது மனைவியும் கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளமை குறித்து, நளின் பண்டார – தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்