வெளியில் செல்லும் போது, ஜுலை தொடக்கம் முகக் கவசங்கள் தேவையில்லை: தென்கொரியா அறிவிப்பு

🕔 May 27, 2021

கொவிட் தொற்றுக்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள், எதிர்வரும் ஜூலை மாதம் முதல், வெளியில் செல்லும்போது முகக் கவசங்கள் அணியத் தேவையில்லை என்று தென் கொரியா நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்துக்குள் தென் கொரியா தனது 52 மில்லியன் மக்களில் குறைந்தது 70 வீதமானோருக்கு தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த அறிவிப்பு உள்ளது.

குறைந்தது ஒரு தடுப்பூசியாவது பொற்றுக்கொண்ட மக்கள் – அதிக எண்ணிக்கையில் ஒன்றுகூட, ஜூன் மாதம் தொடக்கம் அனுமதிக்கப்படுவார்கள் என்று, அந்த நாட்டின் பிரதமர் கிம் பூ-கியூம் புதன்கிழமை தெரிவித்தார்.

60 முதல் 74 வயதுக்குட்பட்டவர்களில் 60 வீதத்துகக்கும் அதிகமானோர் தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்துள்ளனர் என்று, அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்