வாகன இறக்குமதி தொடர்பில், இன்று அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

🕔 May 24, 2021

வாகனங்களை குறைந்த எண்ணிக்கையில் இறக்குமதி செய்வதற்கு அல்லது வாகனங்களின் இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக, இன்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.

தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை மற்றும் நிதி நிலை தொடர்பில் கவனம் செலுத்தி வாகன இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக அமைச்சரவையில் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, வாகனங்களை குறைந்த எண்ணிக்கையில் இறக்குமதி செய்வதற்கு அல்லது வாகனங்களின் இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்