கொரோனா பாதிப்பு: மீண்டும் 05 ஆயிரம் ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானம்

🕔 May 28, 2021

கொரோனா பாதிப்பு மற்றும் நடமாட்டத் தடை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, ஜூன் மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சமுர்த்தி பெறுநர்கள், தொழில் இழந்தோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இவ்வாறு நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக 30 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னரும் 05 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாடு முழுவதும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்