புதிய சட்ட மா அதிபராக சஞ்சய ராஜரத்தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

🕔 May 26, 2021

புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்தினம் இன்று பிற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

புதிய சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் – நாட்டின் 48வது சட்ட மா அதிபர் ஆவார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 34 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்துள்ள ராஜரத்தினம், அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் பிரதி மன்றாடியார் நாயகம் (Deputy solicitor general), மேலதிக மன்றாடியார் நாயகம் (Additional solicitor general), , சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம் (Senior Additional solicitor general), மற்றும் பதில் மன்றாடியார் நாயகம் (Acting solicitor general), ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

கொழும்பு புனித பீட்டர் கல்லூரி மற்றும் ரோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றுள்ள அவர், லண்டனில் உள்ள குயின்மேரி பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

ராஜரத்தினம் இங்கிலாந்து மற்றும் வேல்சின் மன்றாடியார் (solicito) ஆவார். அவர் 2014ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்தார்.

குடியியல் மற்றும் குற்றவியல் சட்டத்துறைகளில் விரிவான அனுபவத்தை பெற்றுள்ள அவர், நீண்டகாலமாக மேல் நீதிமன்றங்களில் முன்னிலை ஆகியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்களில் ஆலோசகர் பொறுப்பையும் வகித்துள்ள அவர் – இலங்கை சட்ட ஆணைக்குழு, சட்டக் கல்விப் பேரவை ஆகியவற்றின் உறுப்பினருமாவார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்