வெசாக் தினத்தையொட்டி ஜனாதிபதி மன்னிப்பில் 260 சிறைக் கைதிகளுக்கு விடுதலை: 53 பேர் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டோர்

🕔 May 26, 2021

வெசாக் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுவதை கருத்திற் கொண்டு 260 கைதிகள் ஜனாதிபதி வழங்கிய மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுள் தண்டனை அனுபவித்த 53 கைதிகளுக்கு ஜனாதிபதியின் சிறப்பு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுவது, 19 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் தொடர்பான விதிமுறைகள் திருத்தப்பட்டு, 247 கைதிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீக்கப்படுகின்றன.

அவர்களில், 53 கைதிகளுக்கு ஜனாதிபதின் சிறப்பு ஜ மன்னிப்பு வழங்கப்பட்டு இன்று விடுவிக்கப்பட்டனர்.

ஆயுள் தண்டனைக்கான அதிகபட்ச காலம் 25 ஆண்டுகளாக மாற்றப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் இலங்கையில் நிலவும் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக சுகாதார நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்