ஐ.தே.கட்சியை கழற்றி விடுமாறு, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் வலியுறுத்தல்

ஐ.தே.கட்சியை கழற்றி விடுமாறு, சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவினர் வலியுறுத்தல் 0

🕔14.May 2017

தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு, ஐ.தே.கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் வலியுறுத்துவதாகத் தெரியவருகிறது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர். தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செய்து கொள்ளப்பட்ட மேற்படி ஒப்பந்தம், இரண்டு வருட காலத்துக்கானதாகும். அந்த

மேலும்...
ஹோட்டல் நிர்மாணிக்க தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்: கொழும்பில் பதட்டம்

ஹோட்டல் நிர்மாணிக்க தோண்டிய இடத்தில் மனித எலும்புக் கூடுகள்: கொழும்பில் பதட்டம் 0

🕔13.May 2017

கொழும்பு – கோட்டே, காலிமுகத் திடலுக்கு அருகாமையில், சங்கரி லா ஹோட்டல் நிர்மாணிக்கப்படும் இடத்தில், தோண்டப்பட்டபோது, மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட இடம், முன்னர் இலங்கை ராணுவத்தினருக்குச் சொந்தமானதெனக் கூறப்படுகிறது. கடற்கரையை ஒட்டிய மேற்படி 10 ஏக்கர் காணியினை, கடந்த அரசாங்கத்திடம் ஹொங்கொங் நாட்டை தளமாகக் கொண்ட சங்கரி லா ஹோட்டல் நிருவாகத்தினர் 125

மேலும்...
அமைச்சரவை மாற்றத்துக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒப்புதல்

அமைச்சரவை மாற்றத்துக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒப்புதல் 0

🕔13.May 2017

அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஒப்புதல் வழங்கியுள்ளனர் என்று, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, விரையில் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். குறித்த அமைச்சரவை மாற்றமானது – நாட்டுக்கு பயன்மிக்க வகையில் அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருந்தாளர்கள் 52 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே

மேலும்...
இரட்டைக் குடியுரிமை விவகாரம்: தமிழர்கள் அடங்கலாக, 06 பேரின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு ஆபத்து

இரட்டைக் குடியுரிமை விவகாரம்: தமிழர்கள் அடங்கலாக, 06 பேரின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு ஆபத்து 0

🕔13.May 2017

இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர்கள் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கமைய, அமைச்சர் ஒருவர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஒருவர் உள்ளடங்கலாக 06 பேரின் உறுப்புரிமை பறிபோகும்  அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் 04 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இரட்டைக் குடியுரிமை

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுப்போர் குறித்து, அமைச்சர் றிசாத் விசனம்

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுப்போர் குறித்து, அமைச்சர் றிசாத் விசனம் 0

🕔13.May 2017

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு எத்தனை தடைகளைப் போட முடியுமோ, அவை அனைத்தையும் – இனவாதிகளும் இனவாத சிங்கள ஊடகங்களும் மேற்கொண்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தில்லையடி அன்சாரி வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை, அதிபர் வதூத் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக

மேலும்...
நிறுத்தியிருந்த வாகனத்தை மோதிவிட்டு, கடைக்குள் பாய்ந்த வேன்; சாரதியின் தூக்கத்தால் ஏற்பட்ட விபத்து

நிறுத்தியிருந்த வாகனத்தை மோதிவிட்டு, கடைக்குள் பாய்ந்த வேன்; சாரதியின் தூக்கத்தால் ஏற்பட்ட விபத்து 0

🕔13.May 2017

– க. கிஷாந்தன் –  ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், கினிகத்தேன ரம்பதெனிய பகுதியில் வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதேவேளை, காரில் மோதிய வேன், அருகிலிருந்த கடைக்குள் புகுந்ததால், குறித்த கடையும் சேதமடைந்துள்ளது. இன்று சனிக்கிழமை காலை இந்த விபத்து நிகழ்ந்ததாக கினிக்கத்தேன பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து மஸ்கெலியா வரை

மேலும்...
மாயக்கல்லி விவகாரத்தில் நீதிமன்றம் அவமதிப்பு: மாகாணசபை உறுப்பினர் லாஹிரை காணவில்லை

மாயக்கல்லி விவகாரத்தில் நீதிமன்றம் அவமதிப்பு: மாகாணசபை உறுப்பினர் லாஹிரை காணவில்லை 0

🕔13.May 2017

– முன்ஸிப் அஹமட் – இறக்காமம் மாயக்கல்லி மலைப் பகுதியின் சர்ச்சைக்குரிய பகுதியினுள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை, யாரும் உள்நுழையக் கூடாது என, அம்பாறை மேலதிக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கடந்த புதன்கிழமை – மேற்படி மலையில் வெசாக் பூஜை வழி­பா­டுகள் இடம்பெற்றுள்ளன. மாயக்கல்லி மலையில் அடாத்தாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை முன்னிறுத்தி இந்த வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும்...
மாயக்கல்லியில் விகாரை அமைவது, முஸ்லிம்களுக்கே பயனாக அமையும்: புதுக்கதை சொல்கிறார் சீலரத்ன தேரர்

மாயக்கல்லியில் விகாரை அமைவது, முஸ்லிம்களுக்கே பயனாக அமையும்: புதுக்கதை சொல்கிறார் சீலரத்ன தேரர் 0

🕔12.May 2017

இறக்காமம் மாயக்கல்லி மலைப்பகுதியில் விகாரை ஒன்றினை அமைக்கும் பொருட்டு,  காணி உறு­தி­களைக் கொண்­டுள்ள முஸ்­லிம்­களின் காணிகளில் ஒரு சிறிய துண்­டை­யேனும்  அப­க­ரிக்க மாட்டோம் என, அம்­பாறை விதி­யா­னந்த பிரி­வென பிர­தானி அம்­பே­பிட்­டிய சீல­ரத்­ன­தேரர் தெரி­வித்தார்.இதே­வேளை, மாணிக்­க­மடு – மாயக்­கல்லி பிர­தே­சத்தில் நாம் விகா­ரை­யொன்றை மாத்­தி­ரமே நிர்­மா­ணிப்போம். பௌத்த குடும்பம்  ஒன்­றேனும் குடி­ய­மர்த்­தப்­ப­ட­மாட்­டார்கள் என்­பதை பொறுப்­புடன்  கூறு­கிறேன் எனவும்

மேலும்...
மோடியுடன் மஹிந்த, கோட்டா சந்திப்பு

மோடியுடன் மஹிந்த, கோட்டா சந்திப்பு 0

🕔12.May 2017

இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ஆகியோர் சந்திப்பொன்றினை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றிரவு மோடி விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார். இதன் பின்னரே, மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. இது திட்டமிடப்படாததொரு அவசர சந்திப்பாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்

மேலும்...
பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் நால்வர் பலி

பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் நால்வர் பலி 0

🕔12.May 2017

பொலநறுவை பெந்திவெவ பகுதியில், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், இன்று வெள்ளிக்கிழமை காலை  நால்வர் உயிரிழந்தனர். மட்டக்களப்பு – ஹபறன வீதியிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே, மரணமடைந்தனர். பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும்...
கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔12.May 2017

கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் கீதா குமாரசிங்க மேன்முறையீடு செய்திருந்தார். குறித்த

மேலும்...
இலங்கையை மோடி வந்தடைந்த போது, பாதுகாப்பினை தாண்டி நெருங்கிய ஊடகவியலாளரால் பரபரப்பு

இலங்கையை மோடி வந்தடைந்த போது, பாதுகாப்பினை தாண்டி நெருங்கிய ஊடகவியலாளரால் பரபரப்பு 0

🕔12.May 2017

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை மாலை இலங்கையை வந்தடைந்தார். சர்வதேச வெசாக் தின நிகழ்விலும், இன்னும் சில வைபவங்களிலும் அவர் கலந்து கொள்ளவுள்தாகத் தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தை வந்தடைந்த மோடிக்கு இந்திய ராணுவத்தினர் மற்றும் இந்தியாவின் கறுப்பு பூனைகள் கொமாண்டோ படையினர் பலத்த பாதுகாப்பினை வழங்கினர். இந்த நிலையில், மேற்படி பாதுகாப்பினை சாதுரியமாகத் தாண்டி, மோடி பயணிக்கத்

மேலும்...
சாய்ந்தமருது காரியாலய இடமாற்றத்துக்கு எதிராக, சத்தியாக்கிரகம் நடைபெறும்: ஊடக சந்திப்பில் எச்சரிக்கை

சாய்ந்தமருது காரியாலய இடமாற்றத்துக்கு எதிராக, சத்தியாக்கிரகம் நடைபெறும்: ஊடக சந்திப்பில் எச்சரிக்கை 0

🕔11.May 2017

– எம். வை. அமீர், யூ.கே. காலிதின் – சாய்ந்தமருத்தில் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணக் காரியாலயத்தை இடமாற்ற முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிராக, சத்தியாக்கிரக போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று, கல்முனைத் தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் தில்ஷாத் அஹமட் தெரிவித்தார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருதில் அமைந்துள்ள மாகாணக்காரியாலயத்தை இடமாற்றுவதற்கு எதிரான

மேலும்...
எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு மூதறிஞர் பட்டம்; சேகு தலைமையில் வழங்கப்படவுள்ளது

எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு மூதறிஞர் பட்டம்; சேகு தலைமையில் வழங்கப்படவுள்ளது 0

🕔11.May 2017

முஸ்லிம் ஆய்வாளரும், பன்னூலாசிரியருமான எம்.ஐ.எம். முஹயத்தீன், மூதறிஞர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். முன்னாள் அமைச்சர், சட்டத்தரணி, வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் தலைமையில், நாளை வெள்ளிக்கிழமை மாலை, அக்கரைப்பற்று கடற்கரையில் நடைபெறும், முழு இரவில் கலையிரவு எனும் நிகழ்வில் இந்த கௌரவிப்பு இடம்பெறவுள்ளது. முஸ்லிம் தேசிய ஆய்வகம் மேற்படி கௌரவத்தினை வழங்கவுள்ளது. இதன்போது, எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு

மேலும்...
மூத்த ஊடகவியலாளர் நிலாமின் புதல்வர் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் நிலாமின் புதல்வர் காலமானார் 0

🕔11.May 2017

  – எம்.எஸ்.எம். ஸாகிர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரத்தின் உப தலைவரும் லேக் ஹவுஸ் தினகரன் பத்திரிகையின் ஆலோசருமான எம்.ஏ.எம். நிலாமின் இளைய மகன் முஹம்மத் றிஷான் (37 வயது) இன்று வியாழக்கிழமை மாலை காலமானார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர், கட்டாரில் தொழில் புரிந்துவிட்டு அண்மையில் தாயகம் திரும்பியிருந்தார். இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்