அமைச்சரவை மாற்றத்துக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒப்புதல்
அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஒப்புதல் வழங்கியுள்ளனர் என்று, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க, விரையில் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த அமைச்சரவை மாற்றமானது – நாட்டுக்கு பயன்மிக்க வகையில் அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருந்தாளர்கள் 52 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.