எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு மூதறிஞர் பட்டம்; சேகு தலைமையில் வழங்கப்படவுள்ளது

🕔 May 11, 2017

முஸ்லிம் ஆய்வாளரும், பன்னூலாசிரியருமான எம்.ஐ.எம். முஹயத்தீன், மூதறிஞர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

முன்னாள் அமைச்சர், சட்டத்தரணி, வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் தலைமையில், நாளை வெள்ளிக்கிழமை மாலை, அக்கரைப்பற்று கடற்கரையில் நடைபெறும், முழு இரவில் கலையிரவு எனும் நிகழ்வில் இந்த கௌரவிப்பு இடம்பெறவுள்ளது.

முஸ்லிம் தேசிய ஆய்வகம் மேற்படி கௌரவத்தினை வழங்கவுள்ளது.

இதன்போது, எம்.ஐ.எம். முஹயத்தீனுக்கு – மௌலானா மௌலவி எம்.ஏ.எம். ஆப்தீன் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கவுள்ளார்.

இந் நிகழ்வில், சட்டமுதுமாணியாகப் பட்டம் பெற்றுள்ள முஸ்லிம் தேசியத்தின் முதற்பெண்மணி சட்டத்தரணி பாத்திமா ஹஸனா சேகு இஸ்ஸதீனும் பராட்டி கௌரவிக்கப்படவுள்ளார்.

இதே நிகழ்வில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பெண் சட்டத்தரணிகளான சஸ்னா, ஸமா ஆனிஸ் மற்றும் ஹூஸ்னா ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்