மோடியுடன் மஹிந்த, கோட்டா சந்திப்பு

🕔 May 12, 2017

லங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ஆகியோர் சந்திப்பொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றிரவு மோடி விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார். இதன் பின்னரே, மேற்படி சந்திப்பு இடம்பெற்றது.

இது திட்டமிடப்படாததொரு அவசர சந்திப்பாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு அமையவே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸும் கலந்து கலந்துகொண்டார்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்,  தனது ஆட்சியினை தோற்கடிப்பதற்கு இந்தியா காரணமாக இருந்ததாக மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியிருந்த நிலையிலேயே, இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதேவேளை, இந்திய பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு, கறுப்பு கொடிகளை பறக்க விடுமாறு மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்