பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் நால்வர் பலி

🕔 May 12, 2017

பொலநறுவை பெந்திவெவ பகுதியில், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், இன்று வெள்ளிக்கிழமை காலை  நால்வர் உயிரிழந்தனர்.

மட்டக்களப்பு – ஹபறன வீதியிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே, மரணமடைந்தனர்.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்