நிறுத்தியிருந்த வாகனத்தை மோதிவிட்டு, கடைக்குள் பாய்ந்த வேன்; சாரதியின் தூக்கத்தால் ஏற்பட்ட விபத்து

🕔 May 13, 2017

– க. கிஷாந்தன் –

 ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், கினிகத்தேன ரம்பதெனிய பகுதியில் வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதேவேளை, காரில் மோதிய வேன், அருகிலிருந்த கடைக்குள் புகுந்ததால், குறித்த கடையும் சேதமடைந்துள்ளது.

இன்று சனிக்கிழமை காலை இந்த விபத்து நிகழ்ந்ததாக கினிக்கத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து மஸ்கெலியா வரை சென்ற வேன், கினிகத்தேனை ரம்பதெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதி, அருகில் இருந்த கடைக்குள் புகுந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

வேன் மோதியதால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

வேன் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன் காரணத்தினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், இதன்போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து ஏற்படும் போது கார் மற்றும் கடையில் எவரும் இருக்கவில்லை.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments