இலங்கையை மோடி வந்தடைந்த போது, பாதுகாப்பினை தாண்டி நெருங்கிய ஊடகவியலாளரால் பரபரப்பு

🕔 May 12, 2017

ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை மாலை இலங்கையை வந்தடைந்தார்.

சர்வதேச வெசாக் தின நிகழ்விலும், இன்னும் சில வைபவங்களிலும் அவர் கலந்து கொள்ளவுள்தாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்தை வந்தடைந்த மோடிக்கு இந்திய ராணுவத்தினர் மற்றும் இந்தியாவின் கறுப்பு பூனைகள் கொமாண்டோ படையினர் பலத்த பாதுகாப்பினை வழங்கினர்.

இந்த நிலையில், மேற்படி பாதுகாப்பினை சாதுரியமாகத் தாண்டி, மோடி பயணிக்கத் தயாரான வாகனத்தை நெருங்கிய ஊடகவியலாளர் ஒருவர், மோடியினை படமெடுத்தமை அவதானத்துக்குள்ளானது.

குறித்த ஊடகவியலாளர் மோடியின் வாகனத்தை நெருங்கியதும், பரபரப்படைந்த மோடியின் இந்திய பாதுகாப்பு பிரிவினர், அவரை ஒரு கட்டத்துக்கு மேல் முன்னேற விடாமல் தடுத்தனர்.

எவ்வாறாயினும், குறித்த ஊடகவியலாளர் படமெடுக்கும் தனது நோக்கத்தை நிறைவு செய்து கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்