அரிதான சந்திர கிரகணம் நாளை; இலங்கையர்களும் காணக் கூடியதாக இருக்கும்

அரிதான சந்திர கிரகணம் நாளை; இலங்கையர்களும் காணக் கூடியதாக இருக்கும் 0

🕔26.Sep 2015

மிகவும் அரிதான சந்திர கிரகணமொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை  ஏற்படவுள்ளதாக, வானியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். முப்பது வருடங்களுக்கு பின்னர், இவ்வாறானதொரு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாக நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சந்திர கிரகணத்தினை இலங்கையர்களும் காணக்கூடியதாக இருக்குமெனக் கூறப்படுகிறது. மிகவும் பிரகாசமாகவும், மிகப் பெரிதாகவும் சந்திரன் தென்பட்ட பின்னரே, சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. ஏனைய நாட்களின் தென்படும் சந்திரனை விடவும், நாளை தென்படும்

மேலும்...
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அறுகம்பேயில் ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, அறுகம்பேயில் ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா 0

🕔25.Sep 2015

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஹெலி கொப்டர் கண்காட்சி சுற்றுலா எனும் நிகழ்வு ஆரம்பமானது. வெளிநாட்டு, மற்றும் உள்ளுர் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தினை ஈர்கும் வகையில், நடத்தப்பட்டு வரும் இந் நிகழ்வினை சுற்றுலா மற்றும் கைத்தொழில் சம்மேளம் ஏற்பாடு செய்துள்ளது. மேற்படி ஹெலிகொப்டர் கண்காட்சி சுற்றுலா நிகழ்வின் ஆரம்ப வைபவம்

மேலும்...
ஒரே முளையில் 08 காளான்கள், டிக்கோயா ஆலயத்தில் அதிசயம்

ஒரே முளையில் 08 காளான்கள், டிக்கோயா ஆலயத்தில் அதிசயம் 0

🕔25.Sep 2015

– க.கிஷாந்தன் – டிக்கோயா வனராஜா கீழ்பிரிவு சமவீல் தோட்டத்தின் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில், ஒரே முளையில் 08 காளான்கள் பூத்துள்ளன. மேற்படி ஆலயம் இன்று வெள்ளிக்கிழமை வழிபாடுக்காக பூசகரால் வழமைபோல் காலை திறக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஆலயத்தின் உட்பகுதியில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரே முளையில் 8 காளான்கள் பூத்திருந்துள்ளன இதனை

மேலும்...
மினாவில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்வு

மினாவில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்வு 0

🕔24.Sep 2015

புனித ஹஜ் கடமையின்போது,  ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சஊதி அரேபியாவின் மினாவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்றாஹிம் நபியவர்கள் சைத்தான் மீது கல்லெறிந்த நிகழ்வை ஞாபகிக்கும் வகையில், ஹஜ் கடமையில் ஈடுபடுகின்றவர்கள் மினாவில் கல்லெறிவார்கள். இதனபோது, ஏற்பட்ட நெரிசலிலேயே மேற்படி உயிரிழப்பு இடம்பெற்றுள்ளன. இதில் 850க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தாகவும் அறிய

மேலும்...
தவச்செல்வனின் ‘டார்வினின் பூனைகள்’ உள்ளிட்ட, இரு நூல்களின் அறிமுக நிகழ்வு

தவச்செல்வனின் ‘டார்வினின் பூனைகள்’ உள்ளிட்ட, இரு நூல்களின் அறிமுக நிகழ்வு 0

🕔24.Sep 2015

– க. கிஷாந்தன் –சு. தவச்செல்வனின் ‘படைப்பும் படைப்பாளுமையும்’ மற்றும் ‘டார்வினின் பூனைகள்’ ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வு இன்று வியாழக்கிழமை ஹட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் எழுத்தாளர் சிவனு மனோகரன், ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி உப பீடாதிபதி வ. செல்வராஜ், பேராசிரியர் வ. மகேஸ்வரன், கவிஞர் காவத்தை மகேந்திரன் உள்ளிட்ட

மேலும்...
மின்சார வேலியில் சி்க்கி, விவசாயி பலி

மின்சார வேலியில் சி்க்கி, விவசாயி பலி 0

🕔24.Sep 2015

– க. கிஷாந்தன் –மிருகங்களிடம் இருந்து மரக்கறி தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி, விவசாயி ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று, கொட்டகலை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக, திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.கொட்டகலை ஹெரின்டன் குடியிருப்புத் தொகுதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான எஸ்.தர்மலிங்கம் (வயது 63) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில்

மேலும்...
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில், ஹஜ் பெருநாள் தொழுகை

பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில், ஹஜ் பெருநாள் தொழுகை 0

🕔24.Sep 2015

புனித ஹஜ்பெருநாளை உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடும் இன்றைய தினத்தில், இன்று காலை அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும், ஹஜ் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன. அந்தவகையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகையும், பிரசங்கமும் இடம்பெற்றன. மௌலவி ஐ.எல். ஹாசிம் (மதனி) தொழுகையையும், பிரசங்கத்தினையும் தலைமையேற்று நடத்தினார்.

மேலும்...
ஒற்றுமையாகச் செயலாற்ற உறுதி பூணுவோம்; மு.கா. தலைவரின் ஹஜ்பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பு

ஒற்றுமையாகச் செயலாற்ற உறுதி பூணுவோம்; மு.கா. தலைவரின் ஹஜ்பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிப்பு 0

🕔24.Sep 2015

“ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாட்டில் சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் தென்படுகின்ற சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஒற்றுமையாக, தியாகச் சிந்தனையுடன் செயலாற்ற இந்த நன்நாளில் உறுதிபூணுவோமாக” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் விடுத்துள்ள ‘ஈதுல் அழ்ஹா’ தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;நபி இப்ராஹிம்

மேலும்...
தீராத தலைவலி

தீராத தலைவலி 0

🕔23.Sep 2015

தலைவலி என்பதற்கு மறுபெயராக மு.காங்கிரசின் கையிலிருக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் மாறியிருக்கின்றன. இந்தத் தேசியப்பட்டியல் என்கிற விவகாரத்தால் கட்சியின் தலைவருக்கு, தொண்டர்களுக்கு, ஆதரவாளர்களுக்கு, இந்தப் பதவிகளை இப்போது தற்காலிகமாக வைத்திருப்பவர்களுக்கு என, எல்லோருக்குமே தலைவலிதான். இன்னுமொரு தரப்பாரும் இருக்கிறார்கள். அவர்கள் – இந்தப் பதவியைக் குறிவைத்துக் காத்திருப்பவர்கள். அந்தத் தரப்பாருக்கு இப்போது ஏகப்பட்ட தலைவலி.

மேலும்...
காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாட்டில், பெருநாள் ஒன்று கூடல்

காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாட்டில், பெருநாள் ஒன்று கூடல் 0

🕔23.Sep 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –புனித ஹஜ்ஜூப் பெருநாளை சிறப்பு நிகழ்வாக, காத்தான்குடி மீடியா போரத்தின் ‘பெருநாள் ஒன்று கூடல்’ எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 .30 மணி தொடக்கம் அதிகாலை 04 மணிவரை, காத்தான்குடி கடற்கரை வளவில் இடம்பெறவுள்ளதாக மீடியா போரத்தின் தலைவர் ஏ.எல். டீன் பைரூஸ் தெரிவித்தார்.காத்தான்குடி மீடியோ போரத்தின் நிருவாகத்தில்

மேலும்...
எவ்வளவுதான் வடிக்கட்டிப் பார்த்தாலும், மிருகங்களின் எச்சம் நீருடன் வருகிறது; லோகி தோட்ட மக்களின் துயரம்

எவ்வளவுதான் வடிக்கட்டிப் பார்த்தாலும், மிருகங்களின் எச்சம் நீருடன் வருகிறது; லோகி தோட்ட மக்களின் துயரம் 0

🕔23.Sep 2015

– க.கிஷாந்தன் –தலவாக்கலை லோகி தோட்ட பிரிவில் ஒன்றான, மிட்டில் டிவிசன் பகுதி மக்களுக்கு கிடைக்கும் குழாய் வழி குடிநீரானது, அசுத்தமடைந்த நிலையில் கிடைப்பதாக, அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இந்த நீரை பருகுகின்றவர்களின் உடலில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதாகவும், குறித்த நீரை, எவ்வளவுதான்  வடிக்கட்டினாலும், மணல் மற்றும் மிருகங்களில் எச்சங்கள் நீரில் காணப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது;மிட்டில் டிவிசன்

மேலும்...
தாவினார் அமீர்; அதாஉல்லாவின் கடைசிக்கு முந்தைய, விக்கட்டும் வீழ்ந்தது

தாவினார் அமீர்; அதாஉல்லாவின் கடைசிக்கு முந்தைய, விக்கட்டும் வீழ்ந்தது 0

🕔22.Sep 2015

– முன்ஸிப் –முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் அணியைச் சேர்ந்தவரும், கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான எம்.எல்.ஏ. அமீர் இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாணசபையின் ஆளுந்தரப்புக்குத் தாவினார். இவருடன், மற்றுமொரு எதிர்த்தரப்பு உறுப்பினரான இனிய பாரதி என்றழைக்கப்படும் எஸ். புஷ்பகுமாரும் ஆளுந்தரப்பில் இணைந்து கொண்டார். கிழக்கு மாகாணசபையின் அமர்வு, இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றபோது, இவர்கள் இருவரும் ஆளுந்தரப்போடு

மேலும்...
கிழக்கு மகாணசபை உறுப்பினராக, மாஹிர் சத்தியப் பிரமாணம்

கிழக்கு மகாணசபை உறுப்பினராக, மாஹிர் சத்தியப் பிரமாணம் 0

🕔22.Sep 2015

கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராக அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர் இன்று செவ்வாய்கிழமை, கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.எம். நஸீர், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.

மேலும்...
பாடசாலைக்கு அருகில் குப்பை; அப்புறப்படுத்த முடியாது என்கிறார், கல்முனை மாநகரசபை ஆணையாளர்

பாடசாலைக்கு அருகில் குப்பை; அப்புறப்படுத்த முடியாது என்கிறார், கல்முனை மாநகரசபை ஆணையாளர் 0

🕔21.Sep 2015

– எஸ்.அஷ்ரப்கான் – கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது ‘லீடர் அஷ்ரப்’ வித்தியாலயத்தின் அருகில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால், குறித்த பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினை எதிர்நோக்குவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பாடசாலை அருகில் பாரியளவு குப்பைகள் கொட்டப்படுவதால், மேற்படி பாடசாலை மாணவர்கள் கடுமையான அசேளகரியங்களுக்கு உட்படுவதோடு, நோய்த் தாக்கங்களுக்குட்படக் கூடிய அபாயம் உள்ளதாகவும்

மேலும்...
ஆறு வயதுடைய சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு

ஆறு வயதுடைய சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு 0

🕔21.Sep 2015

– க. கிஷாந்தன் – நுவரெலியா டொப்பேக்ஸ் காட்டுப்பகுதியில் இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தை ஒன்றினை, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை மீட்டனர். ஆறு வயது நிரம்பிய இந்த சிறுத்தை 3.5 அடி உயரமும் 06 அடி நீளமும் கொண்டதென, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறித்த காட்டில் வேட்டையாடுவதற்காக வைத்திருந்த மின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்