ஒரே முளையில் 08 காளான்கள், டிக்கோயா ஆலயத்தில் அதிசயம்

🕔 September 25, 2015

Dikkoya - 01
– க.கிஷாந்தன் –

டிக்கோயா வனராஜா கீழ்பிரிவு சமவீல் தோட்டத்தின் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில், ஒரே முளையில் 08 காளான்கள் பூத்துள்ளன.

மேற்படி ஆலயம் இன்று வெள்ளிக்கிழமை வழிபாடுக்காக பூசகரால் வழமைபோல் காலை திறக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஆலயத்தின் உட்பகுதியில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரே முளையில் 8 காளான்கள் பூத்திருந்துள்ளன

இதனை கண்ட பூசகர் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து இந்த அதிசயத்தினை பார்ப்பதற்காக தோட்ட மக்களும் ஏனைய பிரதேச மக்களும் வருகை தந்தவண்ணமுள்ளனர்.

ஒவ்வொரு காளானும் சுமார் 01 அடி நீளத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.Dikkoya - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்