பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில், ஹஜ் பெருநாள் தொழுகை

🕔 September 24, 2015

Haj prayer - 02
பு
னித ஹஜ்பெருநாளை உலக முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடும் இன்றைய தினத்தில், இன்று காலை அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும், ஹஜ் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன.

அந்தவகையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகையும், பிரசங்கமும் இடம்பெற்றன.

மௌலவி ஐ.எல். ஹாசிம் (மதனி) தொழுகையையும், பிரசங்கத்தினையும் தலைமையேற்று நடத்தினார்.

இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு, ஹஜ் பெருநாள் தொழுகையினை நிறைவேற்றினர்.

இப்றாகிம் நபி அவர்களின் தியாகத்தினை நினைவு கொள்ளும் பொருட்டு, ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ் கடமையை, இன்றைய தினம், உலக நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள முஸ்லிம்கள், புனித மக்கா நகரிலுள்ள கஃபதுல்லா பள்ளிவாசலில் நிறைவேற்றுகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.Haj prayer - 03

Comments