மினாவில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்வு
புனித ஹஜ் கடமையின்போது, ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சஊதி அரேபியாவின் மினாவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இப்றாஹிம் நபியவர்கள் சைத்தான் மீது கல்லெறிந்த நிகழ்வை ஞாபகிக்கும் வகையில், ஹஜ் கடமையில் ஈடுபடுகின்றவர்கள் மினாவில் கல்லெறிவார்கள். இதனபோது, ஏற்பட்ட நெரிசலிலேயே மேற்படி உயிரிழப்பு இடம்பெற்றுள்ளன.
இதில் 850க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தாகவும் அறிய முடிகிறது.
படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளளும் அவசர சிகிச்சைகள் வழங்கத் தயார் நிலையில் உள்ளன. இதேவேளை, நடமாடும் மருத்துவமனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மக்கா – கஃபதுல்லா அமைந்துள்ள ஹரம் பள்ளிவாயலில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில், இம்மாதம் 105 பேர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
மினா நெரிசலில் – இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என, தகவல்கள் தெரிவிக்கின்றன.