அரிதான சந்திர கிரகணம் நாளை; இலங்கையர்களும் காணக் கூடியதாக இருக்கும்
மிகவும் அரிதான சந்திர கிரகணமொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை ஏற்படவுள்ளதாக, வானியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
முப்பது வருடங்களுக்கு பின்னர், இவ்வாறானதொரு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாக நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திர கிரகணத்தினை இலங்கையர்களும் காணக்கூடியதாக இருக்குமெனக் கூறப்படுகிறது.
மிகவும் பிரகாசமாகவும், மிகப் பெரிதாகவும் சந்திரன் தென்பட்ட பின்னரே, சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.
ஏனைய நாட்களின் தென்படும் சந்திரனை விடவும், நாளை தென்படும் சந்திரன் 17 வீதம் பெரிதாகத் தென்படுவதோடு, 100 வீதம் பிரகாசமாகவும் இருக்கும் என்றும் நாஸா நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிலையில், நாளை மறுதினம் கடல் அலையின் மட்டம் சற்று உயரக் கூடும் எனவும், அது பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.