காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாட்டில், பெருநாள் ஒன்று கூடல்

🕔 September 23, 2015
KMF - 01– பழுலுல்லாஹ் பர்ஹான் –

புனித ஹஜ்ஜூப் பெருநாளை சிறப்பு நிகழ்வாக, காத்தான்குடி மீடியா போரத்தின் ‘பெருநாள் ஒன்று கூடல்’ எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 .30 மணி தொடக்கம் அதிகாலை 04 மணிவரை, காத்தான்குடி கடற்கரை வளவில் இடம்பெறவுள்ளதாக மீடியா போரத்தின் தலைவர் ஏ.எல். டீன் பைரூஸ் தெரிவித்தார்.

காத்தான்குடி மீடியோ போரத்தின் நிருவாகத்தில் அங்கம் வகிக்கும் ஊடகவியலாளர்கள், நிருவாக உறுப்பினர்கள்,பொதுச் சபை அங்கத்தர்கள் மாத்திரம் கலந்து கொள்ளும் இவ் ஒன்று கூடலில், அவர்களின் திறமைகளை வெளிக் கொணரும் வகையில் பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

இப் பெருநாள் ஒன்று கூடலில் பங்குபெற்றும் மீடியோ போரத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூகத்தின் பிரச்சினைகளையும், தேவைகளையும் முன்கொண்டு செல்லும் ஊடக உறவுகளை புரிந்துணர்வுடன் கட்டியெழுப்பி, சிறந்த ஆளுமையுள்ள ஊடகவியலாளராக மாற்றுவதை நோக்கமாக  கொண்டே – இவ் ஒன்று கூடல் இடம்பெறவுள்ளதாக மீடியோ போரத்தின் தலைவர் ஏ.எல். டீன் பைரூஸ் குறிப்பிட்டார்.

Comments