கிழக்கு மகாணசபை உறுப்பினராக, மாஹிர் சத்தியப் பிரமாணம்
🕔 September 22, 2015



கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராக அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம். மாஹிர் இன்று செவ்வாய்கிழமை, கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.எம். நஸீர், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணசபையின் சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த எம்.ஐ.எம். மன்சூர், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றமையினை அடுத்து, கிழக்கு மாகாணசபையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மாஹிர் தெரிவு செய்யப்பட்டார்.
சஊதி அரேபியாவின் இலங்கைக்கான தூதரகத்தில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றி வரும் மாஹிர், மிகச் சிறந்ததொரு சமூக சேவையாளராவார்.
மாகாணசபை உறுப்பினராக மாஹிர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட இன்றைய நிகழ்வில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அவரின் ஏராளமான ஆதரவாளர்களும், குடும்பத்தினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Comments



