Back to homepage

மேல் மாகாணம்

புகையிலை கலந்த வெற்றிலை உண்பதால், நாளாந்தம் மூவர் மரணம்

புகையிலை கலந்த வெற்றிலை உண்பதால், நாளாந்தம் மூவர் மரணம் 0

🕔26.Aug 2020

புகையிலை கலந்த வெற்றிலையை உண்பதால், இலங்கையில் நாளாந்தம் மூன்று பேர் வீதம் உயிரிழக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை ஊடாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் குறித்து ​தெரியவந்துள்ளது. எனவே புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் சட்டத்துக்கு அமைய, புகையிலை கலக்கப்பட்ட வெற்றிலை

மேலும்...
இரண்டு சொகுசு கார்கள், ஆரம்பர வீடு: கொழும்பில் சிக்கிய கோடீஸ்வர பிச்சைக்காரர்

இரண்டு சொகுசு கார்கள், ஆரம்பர வீடு: கொழும்பில் சிக்கிய கோடீஸ்வர பிச்சைக்காரர் 0

🕔25.Aug 2020

கைவண்டியொன்றை திருடிய குற்றச்சாட்டில் கொழும்பில் கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர் ஒருவர், பெரும் கோடீஸ்வரர் எனும் அதிர்ச்சிகரமான தகவல் – பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பவுனுவ – மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபர், கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அருகில் பிச்சையெடுத்து வந்தபோது கைது செய்யப்பட்டதாக கரையோர பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி 64 வயதுடைய

மேலும்...
ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்: முஸ்லிம்கள் எவரும் இல்லை

ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்: முஸ்லிம்கள் எவரும் இல்லை 0

🕔25.Aug 2020

புதிய அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அறிவிக்கும் வர்த்தமானி நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் முஸ்லிம்கள் எவரும் இல்லை. அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட போதும், முஸ்லிம்கள் எவரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. செயலாளர் பற்றிய முழு விவரங்களை கீழே காணலாம்.

மேலும்...
சூழல் ஆய்வாளர் அபகீர்த்தி ஏற்படுத்தி விட்டதாகத் தெரிவித்து, 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருகிறார் யோஷித ராஜபக்ஷ

சூழல் ஆய்வாளர் அபகீர்த்தி ஏற்படுத்தி விட்டதாகத் தெரிவித்து, 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருகிறார் யோஷித ராஜபக்ஷ 0

🕔24.Aug 2020

சூழல் ஆய்வாளர் சஜீவ சாமிகர என்பவர் தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை வெளியிட்டார் எனத் தெரிவித்து, அவரிடமிருந்து 500 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை யோசித ராஜபக்ஷ கோரியுள்ளார். சிங்கராஜ வனத்தை அண்மித்த பகுதியில் தனக்கு பாரிய ஹோட்டலொன்று உள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவலை சஜீவ வெளியிட்டதாகத் தெரிவித்து, அவருக்கு – தனது சட்டத்தரணி

மேலும்...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க தயார்: விருப்பத்தை வெளியிட்டார் கரு ஜயசூரிய

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க தயார்: விருப்பத்தை வெளியிட்டார் கரு ஜயசூரிய 0

🕔24.Aug 2020

ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கும் சவாலை ஏற்க தான் தயாராக உள்ளதாக என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கட்சியின் தற்போதைய தலைமைக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையினை கருத்திற் கொண்டு, பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக கட்சியின் மேம்பாட்டிற்காக

மேலும்...
ஆட்கடத்தல் குற்றச்சாட்டு; வாக்குமூலம் வழங்க பின்னடித்து வரும் ரத்ன தேரர் கைதாகலாம்

ஆட்கடத்தல் குற்றச்சாட்டு; வாக்குமூலம் வழங்க பின்னடித்து வரும் ரத்ன தேரர் கைதாகலாம் 0

🕔24.Aug 2020

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தியதாக, அத்துரலியே ரதன தேரருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள பொலிஸ் முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு, ரத்ன தேரர் பின்னடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால், ரத்ன தேரரைக் கைது செய்ய நேரிடும் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

மேலும்...
கொரோனாவினால் பெண் மரணம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு

கொரோனாவினால் பெண் மரணம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு 0

🕔23.Aug 2020

நாட்டில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது பெண் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்

மேலும்...
‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ எனும் போர்வையில், சிறுபான்மையினரின் தனித்துவங்களில் அத்துமீறுவது ஜனநாயக விரோத செயற்பாடாகும்: றிசாட்

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ எனும் போர்வையில், சிறுபான்மையினரின் தனித்துவங்களில் அத்துமீறுவது ஜனநாயக விரோத செயற்பாடாகும்: றிசாட் 0

🕔22.Aug 2020

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற போர்வையில், சிறுபான்மைச் சமூகங்களின் தனித்துவத்தில் அத்துமீறி சட்டங்களை திணிக்க முயல்வது, நாகரீகமான அல்லது ஜனநாயக செயற்பாடாக அமையாது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமானறிசாட் பதியுதீன் தெரிவித்தார் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற பரவலான கருத்தாடல்களும் சொற்பிரயோகங்களும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு அச்சுறுத்தலாக அமையாமல் இருக்கும் வகையில், புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளம் கொள்கை அமுலாக்கங்களும்

மேலும்...
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை: வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை: வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம் 0

🕔21.Aug 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றில் ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை, வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று கூடிய நாடாளுமன்றம் ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி காலை 9.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற சபை அமர்வு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல்

மேலும்...
நாடாளுமன்ற அமர்வுக்கு படகில் வந்த எம்.பி: வரலாற்றிலும் இடம் பிடித்தார்

நாடாளுமன்ற அமர்வுக்கு படகில் வந்த எம்.பி: வரலாற்றிலும் இடம் பிடித்தார் 0

🕔20.Aug 2020

புதிய நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, நாடாளுமன்றின் முதல் அமர்வுக்கு இன்றைய தினம் படகில் வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினரொருவர் நாடாளுமன்ற அமர்விற்கு படகில் வந்தமை வரலாற்றில் முதல் தடவை எனத் தெரியவருகிறது. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினரான மதுர விதானகே

மேலும்...
புதிய அரசியலமைப்பு, இனவாதிகளை திருப்திப்படுத்துவதாக அல்லாமல், எல்லோரின் உரிமைகளையும் மதிக்கத்தக்கதாக இருக்க வேண்டும்: நாடாளுமன்றில் றிசாட் பதியுதீன்

புதிய அரசியலமைப்பு, இனவாதிகளை திருப்திப்படுத்துவதாக அல்லாமல், எல்லோரின் உரிமைகளையும் மதிக்கத்தக்கதாக இருக்க வேண்டும்: நாடாளுமன்றில் றிசாட் பதியுதீன் 0

🕔20.Aug 2020

புதிய அரசியலமைப்பு மாற்றம் அனைத்து இனங்களையும் திருப்திப்படுத்தக்கூடிய வகையிலும், நாட்டின் நலனுக்கு ஏற்புடையதாகவும் அமைய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். 09 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில், இன்று வியாழக்கிழமை காலை கலந்து கொண்டு உரையாற்றுகையில அவர் இதனைக் கூறினார். அங்கு அவர், மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவிகளுக்கு புதிதாகத் தெரிவானோர் விவரம்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவிகளுக்கு புதிதாகத் தெரிவானோர் விவரம் 0

🕔20.Aug 2020

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவாகியுள்ளார். குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

மேலும்...
புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், பிற்பகல் வரை ஒத்தி வைப்பு

புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், பிற்பகல் வரை ஒத்தி வைப்பு 0

🕔20.Aug 2020

புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு ஆரம்பமான நிலையில், பிற்பகல் 3.00 மணி வரை அமர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய அமர்வில் கலந்து கொள்வதற்காக 223 உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தனர். இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மையை பலத்தை பெற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் ஐக்கிய மக்கள்

மேலும்...
223 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளை ஆரம்பம்

223 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளை ஆரம்பம் 0

🕔19.Aug 2020

புதிய நாடாளுமன்ற அமர்வு 223 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாளை ஆரம்பமாகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டிலுக்கான நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேவேளை, ‘எங்கள் மக்கள் சக்தி கட்சி’யின் நாடாளுமன்ற உறுப்பினர் பெயரை அறிவிப்பதில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக 223 உறுப்பினர்களுடனேயே நாளை நாடாளுமன்றம் கூடுகிறது. அதேவேளை, கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட

மேலும்...
வெலிக்கட சிறைச்சாலைக்கு பிள்ளையான் அழைத்து வரப்பட்டார்; நாடாளுமன்ற அமர்வில் நாளை பங்கேற்கிறார்

வெலிக்கட சிறைச்சாலைக்கு பிள்ளையான் அழைத்து வரப்பட்டார்; நாடாளுமன்ற அமர்வில் நாளை பங்கேற்கிறார் 0

🕔19.Aug 2020

புதிய நாடாளுமன்றத்தின் முதல்நாள் அமர்வில் நாளை கலந்து கொள்வதற்காக, மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கொழும்பு வெலிக்கட சிறைச்சாலைக்கு பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்று புதன்கிழமை அழைத்து வரப்பட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கக்கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த 14 ஆம் திகதி பிள்ளையான் சார்பில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தாக்கல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்