ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை: வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றம்

🕔 August 21, 2020

னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றில் ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை, வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று கூடிய நாடாளுமன்றம் ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி காலை 9.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற சபை அமர்வு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமானது.

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்ளல் உள்ளிட்ட பல விடயங்களை தனது கொள்கை பிரகரன உரையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

Comments