நாடாளுமன்ற அமர்வுக்கு படகில் வந்த எம்.பி: வரலாற்றிலும் இடம் பிடித்தார்

🕔 August 20, 2020

புதிய நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, நாடாளுமன்றின் முதல் அமர்வுக்கு இன்றைய தினம் படகில் வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினரொருவர் நாடாளுமன்ற அமர்விற்கு படகில் வந்தமை வரலாற்றில் முதல் தடவை எனத் தெரியவருகிறது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினரான மதுர விதானகே இவ்வாறு படகில் வந்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இது தொடர்பில் கோட்டே நகரசபையின் முன்னாள் முதல்வரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மதுர விதானகே கூறுகையில்,

“ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக தியவன்ன ஓயா அபிவிருத்தி செய்யப்பட்டது. இதனால் இன்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு படகில் வரமுடிந்தது.

அத்துடன் கொழும்பு நகர வீதிகளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக நீர் ஓடைகள் மூலம் போக்குவரத்து செய்வதில் பொது மக்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

Comments