சூழல் ஆய்வாளர் அபகீர்த்தி ஏற்படுத்தி விட்டதாகத் தெரிவித்து, 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருகிறார் யோஷித ராஜபக்ஷ

🕔 August 24, 2020

சூழல் ஆய்வாளர் சஜீவ சாமிகர என்பவர் தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை வெளியிட்டார் எனத் தெரிவித்து, அவரிடமிருந்து 500 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை யோசித ராஜபக்ஷ கோரியுள்ளார்.

சிங்கராஜ வனத்தை அண்மித்த பகுதியில் தனக்கு பாரிய ஹோட்டலொன்று உள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவலை சஜீவ வெளியிட்டதாகத் தெரிவித்து, அவருக்கு – தனது சட்டத்தரணி ஊடாக 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் கடிதத்தை யோசித அனுப்பி வைத்துள்ளார்.

சிங்கராஜ வனத்தில் யோசிதவுக்குச் சொந்தமான ஹோட்டலொன்று உள்ளதாகவும், சிங்கராஜ வனம் ஊடாக வீதியொன்று நிர்மாணிக்கப்பட்டு வருவது – அதனை அண்மித்த வீதியுடன் தொடர்புபடுத்துவதற்கு என்றும் கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் சஜீவ சாமிகர தெரிவித்திருந்தார்.

ஆனால், அங்கு தனக்கு ஹோட்டல் உள்ளதாகக் கூறப்பட்ட விடயத்தை யோசித ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்