இரண்டு சொகுசு கார்கள், ஆரம்பர வீடு: கொழும்பில் சிக்கிய கோடீஸ்வர பிச்சைக்காரர்

🕔 August 25, 2020

கைவண்டியொன்றை திருடிய குற்றச்சாட்டில் கொழும்பில் கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர் ஒருவர், பெரும் கோடீஸ்வரர் எனும் அதிர்ச்சிகரமான தகவல் – பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பவுனுவ – மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபர், கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அருகில் பிச்சையெடுத்து வந்தபோது கைது செய்யப்பட்டதாக கரையோர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்படி 64 வயதுடைய நபருக்கு இரண்டு சொகுசு ரக கார்கள் மற்றும் ஆடம்பர மாடி வீடு ஆகியவை உள்ளதாக, பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தனது வீட்டின் மேல் மாடியை இவர் வாடகைக்கு கொடுத்து மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாவை வாடகையாகப் பெற்று வருவதோடு, பிச்சை எடுப்பதன் மூலம் நாளாந்தம் 05 ஆயிரம் ரூபாவை வருமானமாகவும் பெற்றும் வருகின்றார்.

ஜம்பட்டா வீதியில் பழங்கள் ஏற்றப்பட்ட கைவண்டியொன்று திருடப்பட்டதாக பொருஸாருக்கு கிடைத்த முறைப்பாடு ஒன்றினை அடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிரிவி கமராக்களை பொலிஸார் ஆராய்ந்தபோது, குறித்த வண்டியை திருடிய மேற்படி நபர் அகப்பட்டார்.

இந்த விடயம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: டெய்லி மிரர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்