புகையிலை கலந்த வெற்றிலை உண்பதால், நாளாந்தம் மூவர் மரணம்

🕔 August 26, 2020

புகையிலை கலந்த வெற்றிலையை உண்பதால், இலங்கையில் நாளாந்தம் மூன்று பேர் வீதம் உயிரிழக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை ஊடாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் குறித்து ​தெரியவந்துள்ளது.

எனவே புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் சட்டத்துக்கு அமைய, புகையிலை கலக்கப்பட்ட வெற்றிலை வகைகளை விற்பதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் முழுமையாக தடைவிதிக்க வேண்டும் என்று புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தவிசாளர் வைத்தியர் சமாதி ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அதேப்போல் புகைத்தலால் 04 விநாடிக்கு ஒருவர் என்ற வீதத்தில் உலகில் ஒருவர் உயிரிழப்பதாகவும் இதற்கமைய, இலங்கையில் வெற்றிலையைப் போல, புகைத்தலாலும் நாளொன்றுக்கு மூவர் உயிரிழப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments