638 தடவை கொலை முயற்சியிலிருந்து தப்பித்த பிடல் காஸ்ட்ரோ, இயற்கையாக மரணித்தார் 0
கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான ஃபிடல் காஸ்ட்ரோ, தனது 90 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை மரணமடைந்தார். கடந்த பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மறைந்த தகவலை, கியூபாவின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டது. கியூபா நேரப்படி 22.29 மணிக்கு ஃபிடல் காஸ்ட்ரோ உயிர் பிரிந்ததாக, அந்நாட்டின் ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தோன்றி