தெரணியகல முன்னாள் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 18 பேருக்கு மரண தண்டனை

🕔 November 25, 2016

death-sentence-001தெரணியகரல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்க விஜேசிங்க உள்ளிட்ட 18 பேருக்கு அவிசாவளை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தெரணியகலை நூரி தோட்டத்தில் நடந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 18 பேருக்கு, இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் 4ஆம், 5ஆம் மற்றும் 20ஆம் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தெரணியகலை நூரி தோட்ட முகாமையாளர் நிஹால் பெரேராவை கொலை செய்தமை மற்றும் அவரது இரண்டு உதவியாளர்களை தாக்கி காயம் ஏற்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில், அத்கொட்டா என்று அழைக்கப்படும் தெரணியகரல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்க விஜேசிங்க உட்பட 21 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2003ஆம் ஆண்டு தெரணியகலை நூரி தோட்ட அதிகாரி நிஹால் பெரேரா கொலை செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்