இஸ்ரேல் ஆக்கிரமித்த ஹைபா எரிகிறது; 80 ஆயிரம் பேர் வெளியேற்றம், 130 பேர் வைத்தியசாலையில்

🕔 November 25, 2016

isreal-01ஸ்ரேலின் பரவிவரும் தீ காரணமாக அந்த நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான ஹைஃபாவை விட்டும் மக்கள் வெளியேறிவருகின்றனர். கடந்த செவ்வாய்கிழமை மாலை பற்றிய தீ, தற்போது வரை எரிந்து கொண்டிருக்கிறது.

ஹைபா நகரானது பலஸ்தீனுக்கு சொந்தமானது. ஆயினும் அந்த நிலத்தினை ஆக்கிரமித்த இஸ்ரேல், அங்கு தமது மக்களைக் குடியேற்றியிருந்தது.

இந்த நிலையில், இப்பகுதி கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், கடுமையாக காற்று வீசி வருவதாலும் தீயினைக் கட்டுப்படுத்த முடியாமலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹைஃபா நகரை இந்தத் தீ சுற்றி வளைத்ததோடு, அண்டையிலுள்ள நகரங்களான ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரை பிரதேசங்களுக்கு மிரட்டலாகி வருவதாகவும் அறியமுடிகிறது. கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து பரவி வரும் தீயை அணைக்க கடுமையாக போராட்டத்தில் தீயணைப்பில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நகரைச் சுற்றி இருந்த பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றம் இரண்டு சிறைச்சாலைகள் உடனயாக காலி செய்யப்பட்டன. பல குடியிருப்புப் பகுதிகளில் தீ பரவும் அபாயம் இருந்ததால் மக்களும் வெளியேற்றப்பட்டனர். கிட்டத்தட்ட 80 ஆயிரம் பேர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து மக்களை வெளியேற்றும் நிலை உள்ளது.

தீயினால் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களும் வீடுகளும் சேதமடைந்துள்ளன. இதுவரை 130 பேர் காயமடைந்து மருத்துவ னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், குறித்த தீ விபத்து நாசகார வேலை என இஸ்ரேல் தெரிவித்துள்ளதோடு,  07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு, இந்த தீ வைப்புச் செயலானது பயங்கரவாதத்துக்குச் சமனானது என்று எச்சரித்துள்ளார்.

திட்டமிட்டு தீ வைக்கப்பட்டிருப்பதாகவும் இதில் பாலஸ்தீன இளைஞர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனினும், இத்தகைய குற்றச்சாட்டுக்களை, பாலஸ்தீன அதிபர் மஹ்மூட் அப்பாஸ் நிராகரித்துள்ளார்.

“இங்கே பற்றி எரியும் நிலம் எங்களுடையது. காடுகள் எங்களுடையது. மரங்கள் எங்களுடையது. செடி கொடிகள் எங்களுடையது எங்களின் பாலஸ்தீன மண்ணுக்குரியது. எனவே இந்த மண்ணுக்குச் சொந்தமில்லாதவர்கள்தான் இதை எரித்திருக்க வேண்டும்” என்று மஹ்மூட் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.isreal-02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்