அவன்காட் கப்பலை 35 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவு

🕔 November 25, 2016

avante-garde-09வன்காட் கப்பலை 35 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்குமாறு, காலி நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள குறித்த கப்பல்,  உரிய நிறுவனத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

அவன்காட் கப்பல் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம், காலி துறைமுகத்துககு அருகில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மிதக்கும் ஆயுதக் களஞ்சியமாக அவன்காட் கப்பல் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவன்காட் நிறுவனத்துடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இணைத்துப் பேசப்பட்டமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்