டான் பிரியசாத்தின் விளக்க மறியல் நீடிப்பு; சட்டத்தரணிகளும் ஆஜராகவில்லை

🕔 November 25, 2016

dan-priyasad-098டான் பிரியசாத் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகாத நிலையில், அவரின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மதங்களைப் புண்படுத்தும் வயைில் குரோதமான கருத்துக்களை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பிரியசாத்தின் வழக்கு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், டான் பிரியசாதுக்கு பிணை வழங்க எந்த வித ஆட்சேபனைகளும் இல்லை எனத் தெரிவித்தனர். ஆயினும், கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்படவேண்டும் எனக் குறிப்பிட்டனர்.

என்றாலும் டான் பிரியசாத் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை. அதன் காரணமாக குறித்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் 02ஆம் திகதிவரை ஒத்திவைத்த நீதவான், பிரியசாத்தை டிசம்பர் 02ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த வழக்கை நீதவானுடன் கலந்துரையாடி இன்றைய தினமே மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பிரதிவாதிகள் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அதற்கு நீதவான் அனுமதி வழங்கவில்லை.

முறைப்பாட்டாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான மைத்திரி குணரத்ன, சிராஸ் நூர்தீன் ஆகியோர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்