இணையத்தள டேட்டாவுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

🕔 November 24, 2016

Ravi karunanayaka - 0976ணையத்தளத்தைப் பயன்படுத்துவதற்கான டேட்டாவுக்குரிய கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி சேவை வழங்குநர் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் நட்டத்தை ஈடு செய்வதற்காகவே, இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இணைய டேட்டா மூலம் வைபர், வட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் போன்றவை ஊடாக அழைப்பு பெற்றுக் கொள்வதனால், தொலைபேசி அழைப்புக்கான சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்படுகிறது. அதற்கமைய அதன் நட்டத்தை ஓரளவு சமப்படுத்துவதற்காகவே இணையத்தள சேவை கட்டணத்தை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக எதிர்வரும் புரட்சிகரமான பயணம் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இணையத்தள சேவை கட்டணம் அதிகரிக்கபடுவது ஏன் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறான கட்டணங்கள் அதிகரிப்பின் ஊடாக தொலைத் தொடர்பு சேவை வழங்கும்  நிறுவனங்களுக்கும் மற்றும் அரசாங்கத்துக்கும் சில வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

தொலைப்பேசி சிம் அட்டை ஒன்றை பதிவு செய்யும் போது 250 ரூபாய் அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்