Back to homepage

Tag "ரணில் விக்ரமசிங்க"

ரணிலுக்கு வாக்களிக்காதது ஏன்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் விளக்கம்

ரணிலுக்கு வாக்களிக்காதது ஏன்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் விளக்கம் 0

🕔13.Dec 2018

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காமல், ரணில் விக்ரமசிங்கவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வந்ததால்தான், நேற்றைய தினம் நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையினை நிரூபிக்கும் யோசனையின் அடிப்படையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தான் கலந்து கொள்ளவில்லை என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி்னர் சிவசக்தி

மேலும்...
ரணிலுக்கும் எனக்குமிடையில் எந்தவித ஒப்பந்தமும் இல்லை: சம்பந்தன் தெரிவிப்பு

ரணிலுக்கும் எனக்குமிடையில் எந்தவித ஒப்பந்தமும் இல்லை: சம்பந்தன் தெரிவிப்பு 0

🕔13.Dec 2018

– அஹமட் – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தனக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்பட்டு, தற்போது வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடிதத் தலைப்பில் சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஐக்கிய

மேலும்...
ரணிலுக்கான  பெரும்பான்மையினை நிரூபிக்கும் வாக்கெடுப்பை ஏற்க மாட்டோம்: கெஹலிய

ரணிலுக்கான பெரும்பான்மையினை நிரூபிக்கும் வாக்கெடுப்பை ஏற்க மாட்டோம்: கெஹலிய 0

🕔12.Dec 2018

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தை தாம் ஏற்கவில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமான நாடாளுமன்றில் மேற்கொள்ளப்படும் எந்தத் தீர்மானத்தினையும் ஏற்றுக் கொள்வதற்கு, தாங்கள் தயாரில்லை எனவும் அவர் கூறினார்.  இந்த நாடாளுமன்றில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும்,

மேலும்...
கண்பொத்தியார் விளையாட்டு

கண்பொத்தியார் விளையாட்டு 0

🕔11.Dec 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக, ஜனாதிபதி வெளியிட்ட அறிவித்தலுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பைப் பரபரப்போடு நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பத்தி எழுதப்படுகிறது.  தத்தமது விருப்பு – வெறுப்புகளுக்கேற்ப, தீர்ப்புக் கிடைத்து விட வேண்டுமென்பதே கணிசமானோரின் ஆசையாக உள்ளது. ஆனால், ‘நீதிக்குக் கருணை கிடையாது’ என்பதை, இங்கு பதிவுசெய்ய வேண்டியுள்ளது. அதனால், அடுத்தவரின்

மேலும்...
ரணிலுக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது

ரணிலுக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது 0

🕔9.Dec 2018

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படலாம் என, எதிர்பாரக்கப்படும் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது, அவர் இதனைக் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவரும் இந்தப் பிரேரணையில், ஜே.வி.பி.க்கு பங்கு கிடையாது எனவும்

மேலும்...
ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம்: திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்டார் நாமல் குமார

ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம்: திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்டார் நாமல் குமார 0

🕔6.Dec 2018

ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது பற்றியும், அவர்கள் வெளியிட்ட தகவல்கள் குறித்தும், நாமல் குமார புதிய பல தகவல்களை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி பதவி வெற்றிடமானால், அப் பதவிக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்கும் ஒருவரை முன்மொழியலாம் என, அரசியலமைப்பில் இருக்கிறதாம் என்று, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர், தன்னுடன்

மேலும்...
ரணிலுக்கு முடியாது: அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

ரணிலுக்கு முடியாது: அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔5.Dec 2018

நாட்டின் சட்டம், ஜனநாயகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணலில் விக்ரமசிங்க, முதலில் அவருடைய கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரச அதிகாரிகளுடன் இன்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது, இந்தக் கருத்தினை அவர் வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இல்லாத

மேலும்...
அதனால் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை துரத்தினேன்: காரணம் கூறினார், ஜனாதிபதி மைத்திரி

அதனால் பிரதமர் பதவியிலிருந்து ரணிலை துரத்தினேன்: காரணம் கூறினார், ஜனாதிபதி மைத்திரி 0

🕔4.Dec 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, ஒரு வாரத்துக்குள் முழுமையாக தீர்க்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். அதேவேளை, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கோரிக்கை விடுத்தாலும், ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்றும் அவர் தனது நிலைப்பாட்டினை வலியுறுத்தியுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு, இன்று மாலை கொழும்பு

மேலும்...
தொடர்ந்தும் தவறுகளைச் செய்ய வேண்டாம்: ஜனாதிபதிக்கு றிசாட் வேண்டுகோள்

தொடர்ந்தும் தவறுகளைச் செய்ய வேண்டாம்: ஜனாதிபதிக்கு றிசாட் வேண்டுகோள் 0

🕔4.Dec 2018

நாட்டின் முதன் மகனான ஜனாதிபதி, அரசியலமைப்பை தன் கையிலெடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் தவறுகளை செய்து கொண்டிருக்காமல், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் விரும்புகின்ற, ஏற்றுக்கொள்கின்ற, அவர்களால் வேண்டுகோள் விடுக்கப்படுகின்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அலரி மாளிகையில் இன்று செவ்வாய்கிழமை

மேலும்...
பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி மீண்டும் முயற்சி: நளின் குற்றச்சாட்டு

பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரதமராக நியமிக்க, ஜனாதிபதி மீண்டும் முயற்சி: நளின் குற்றச்சாட்டு 0

🕔4.Dec 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த, பெரும்பான்மை ஆதரவற்ற ஒருவரை பிரமராக்குவதற்கு ஜனாதிபதி மீண்டும் முயற்சி எடுத்து வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமகா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்றில் பெரும்பான்மையினைக் கொண்டுள்ள

மேலும்...
‘இறகு’ பிடுங்கும் காலம்

‘இறகு’ பிடுங்கும் காலம் 0

🕔4.Dec 2018

 – முகம்மது தம்பி மரைக்கார் – ரெண்டு பட்டுக்  கிடக்கிறது நாடு. வழமை போல், கூத்தாடிகள்  கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுபற்றி அரசியல் தரப்புகளுக்கு, அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவரவரின் பிடிவாதத்தில், அவரவர் விட்டுக் கொடுக்காமல் இருந்து கொண்டிருக்கின்றனர். இதிலிருந்தே, நமது மக்கள் பிரதிநிதிகளின் நாட்டுப் பற்றின்

மேலும்...
225 எம்.பி.கள் கையெழுத்திட்டாலும், ரணிலை பிரதமராக்க மாட்டேன்: ஐ.தே.முன்னணியிடம் மைத்திரி தெரிவிப்பு

225 எம்.பி.கள் கையெழுத்திட்டாலும், ரணிலை பிரதமராக்க மாட்டேன்: ஐ.தே.முன்னணியிடம் மைத்திரி தெரிவிப்பு 0

🕔3.Dec 2018

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் கையெழுத்திட்டாலும், அவரை ஒருபோதும் தான் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு இன்று இரவு நடைபெற்றபோதே, ஜனாதிபதி இதனைக் கூறியதாக, லக்ஷ்மன்

மேலும்...
பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன்; பிரதமர் வேட்பாளராக நிற்க முடியும்: சஜித்

பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன்; பிரதமர் வேட்பாளராக நிற்க முடியும்: சஜித் 0

🕔1.Dec 2018

பிரதமர் பதவியை தற்போதைய காலகட்டத்தில் பொறுப்பேற்கும் எண்ணம் தனக்குக் கிடையாது என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஆனாலும், எதிர்காலத்தில் பொதுத் தேர்தலொன்றின் போது கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தன்னால் நிற்க முடியும் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடக சந்திப்பில், கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே

மேலும்...
எந்திரன்

எந்திரன் 0

🕔27.Nov 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – “நான் உயிரோடு இருக்கும் வரை, ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க மாட்டேன்” என்று, தனது முடிவை மீண்டுமொருமுறை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இதையடுத்து, “இந்த மனிதனுக்கு, இத்தனை பிடிவாதம் கூடாது” என்று, ஒரு சாரார் கோபப்படத் தொடங்கியுள்ளனர். இன்னொரு தரப்பினரின் பார்வை, வித்தியாசமாக உள்ளது. “அந்த

மேலும்...
“மஹிந்த ஆட்சியில் நடந்தவை பற்றி விசாரணை நடக்காமைக்கு, இவர்கள்தான் காரணம்“

“மஹிந்த ஆட்சியில் நடந்தவை பற்றி விசாரணை நடக்காமைக்கு, இவர்கள்தான் காரணம்“ 0

🕔25.Nov 2018

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகள் நடக்காமைக்கு ரணில் விக்ரமசிங்கவும் சாகல ரத்னாயக்கவுமே பொறுப்பேற்க வேண்டும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் இலங்கை ஊடகவியலாளர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார். எவ்வாறாயினும் மஹிந்த ஆட்சியின் போது நடந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்பட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்