ரணிலுக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படலாம் என, எதிர்பாரக்கப்படும் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஜே.வி.பி. ஆதரவளிக்காது என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது, அவர் இதனைக் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவரும் இந்தப் பிரேரணையில், ஜே.வி.பி.க்கு பங்கு கிடையாது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பிரதமர் பதவிக்கான அல்லது அரசாங்கத்தை அமைக்கும் இந்த யுத்தத்தில் ஜே.வி.பி. பங்கேற்காது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் கூறினார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே, நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.