பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன்; பிரதமர் வேட்பாளராக நிற்க முடியும்: சஜித்

🕔 December 1, 2018

பிரதமர் பதவியை தற்போதைய காலகட்டத்தில் பொறுப்பேற்கும் எண்ணம் தனக்குக் கிடையாது என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஆனாலும், எதிர்காலத்தில் பொதுத் தேர்தலொன்றின் போது கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தன்னால் நிற்க முடியும் எனவும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடக சந்திப்பில், கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவற்றினைத் தெரிவித்தார்.

மேலும், ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர் இருந்தமை போன்று, தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக இருக்க வேண்டும் என்று, தமது கட்சி தீர்மானித்துள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ மேலும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்