ரணிலுக்கும் எனக்குமிடையில் எந்தவித ஒப்பந்தமும் இல்லை: சம்பந்தன் தெரிவிப்பு

🕔 December 13, 2018

– அஹமட் –

க்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தனக்கும் இடையில் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்பட்டு, தற்போது வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடிதத் தலைப்பில் சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஐக்கிய தேசியக் கட்சித்த தலைவருடன் நான் எவ்வித ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடவில்லை. மேலும், அவ்வாறு கைச்சாத்திட்டதாகக் கூறப்படும் ஆவணமானது உண்மைக்குப் புறம்பானதாகும்’ எனவும், அந்த அறிக்கையில் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பந்தன் மற்றும் ரணில் ஆகியோருக்கு இடையில் செய்து கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆவணத்துக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார், பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றினைச் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்