ரணிலுக்கான பெரும்பான்மையினை நிரூபிக்கும் வாக்கெடுப்பை ஏற்க மாட்டோம்: கெஹலிய
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தை தாம் ஏற்கவில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமான நாடாளுமன்றில் மேற்கொள்ளப்படும் எந்தத் தீர்மானத்தினையும் ஏற்றுக் கொள்வதற்கு, தாங்கள் தயாரில்லை எனவும் அவர் கூறினார்.
இந்த நாடாளுமன்றில் எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும், பெறுமதியற்றதாகவும் பலனில்லாததாகவும் அமையும் என்பதனாலேயே, தற்போதைய நாடாளுமன்ற அமர்வுகளை தாம் பகிஷ்கரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக, நாடாளுமன்றில் பாகுபாட்டுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய செயற்படுகிறார்” எனவும் இதன்போது அவர் குற்றம்சாட்டினார்.