225 எம்.பி.கள் கையெழுத்திட்டாலும், ரணிலை பிரதமராக்க மாட்டேன்: ஐ.தே.முன்னணியிடம் மைத்திரி தெரிவிப்பு
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் கையெழுத்திட்டாலும், அவரை ஒருபோதும் தான் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு இன்று இரவு நடைபெற்றபோதே, ஜனாதிபதி இதனைக் கூறியதாக, லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் ஐக்கி தேசிய முன்னணியின் பிரதிநிதிகளுக்கும் இடையில நடைபெற்ற மேற்படி சந்திப்பில், இணக்கங்கள் எவையும் காணப்படவில்லை எனத் தெரிய வருகிறது.